அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பயந்தா கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டது? கல்வி அமைச்சரின் பதில்..


தற்போது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பில் மற்றும் போராட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களை கண்டு பயந்தா அல்லது அவர்களின் போராட்டத்தை உடைக்கும் நோக்கிலா கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டு அவர்களை பாடசாலைக்கு அழைத்தது? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கல்வி அமைச்சரிடம் இன்று(3) பாராளுமன்றத்தில் வைத்து கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், 
அவர்களைக் கண்டு பயந்து அல்ல. அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது. ஆனால் உடனடி தீர்வை வழங்க அரசினால் முடியவில்லை. கொவிட் பிரச்சினையால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் வரவுசெலவுத்திட்டம் நவம்பரில் சமர்ப்பிக்கப்படும் பொழுது சகல அரச ஊழியர்களையும் கருத்திற்கொண்டு பிரயோக ரீதியான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி, அவர்கள் உடனே சம்பள அதிகரிப்பை கேட்கவில்லை. தமது கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொள்கிறதா? அப்படி ஏற்றுக்கொண்டால் அதை எப்பொழுதிலிருந்து நடைமுறைப்படுத்தும்? என்று எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என்றே கோரிக்கை விடுக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பயந்தா கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டது? கல்வி அமைச்சரின் பதில்.. அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பயந்தா கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டது? கல்வி அமைச்சரின் பதில்.. Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.