இனிமேல் தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவால் முடியுமா?
irumbuthirai
September 04, 2021

20 வருட யுத்தத்தை ஆப்கானில் முடித்துக் கொண்டு வெளியேறிய அமெரிக்காவின் முடிவு சரியானதுதான் என ஜோ பைடன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஆனால் எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களை அவர் சந்தித்து வருகிறார். அதற்கு பதிலளித்த பைடன், முன்னாள் ஜனாதிபதி டோனால்ட் ரம்ப் செய்து கொண்ட ஒப்பந்தத்தையே தான் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வளவு விரைவாக தலிபான்கள் முன்னேறுவார்கள் என்றோ ஆப்கான் அரசும் ஆப்கான் ராணுவமும் இவ்வளவு விரைவாக தோல்வியை சந்திப்பார்கள் என்றோ எதிர்பார்க்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுமார் 200 அமெரிக்க குடிமக்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில்
எஞ்சியிருக்கிறார்கள். ஆனால் அவர்களை வெளியேற்ற உதவுவதாக தலிபான்களிடமிருந்து அமெரிக்கா வாக்குறுதி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் எவ்வாறிருந்தாலும் இனிமேல் ஆப்கான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடவோ தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்கவோ முடியுமா என்ற விடயம் தொடர்பில் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
ஆப்கானில் அமெரிக்கா இருக்கும் பொழுதே தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. இப்பொழுது இல்லாத நிலையில் எவ்வாறு அழுத்தம் கொடுக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
ஆனால் உலகத்தில் எங்களுக்கிருக்கும் செல்வாக்கையும் ஐநாவின் பரிந்துரைகளையும் நாம் தலிபான் விவகாரத்தில் அழுத்தம் கொடுக்க பயன்படுத்துவோம். எவ்வாறாயினும் தலிபானுடனான பேச்சுவார்த்தைக்கான எங்களது பாதை இன்னும் திறந்தே உள்ளது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் மீது அமெரிக்கா மீண்டும் அழுத்தம் கொடுக்க முடியுமா? முடியாதா? என்ற விடயம் தலிபான்கள் எந்த நாடுகளோடு கூட்டிச் சேர்கிறார்கள் என்ற விடயத்திலும் தங்கியிருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இனிமேல் தலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவால் முடியுமா?
Reviewed by irumbuthirai
on
September 04, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
September 04, 2021
Rating:






















