தலிபான் ஆட்சி: ஆப்கானிலிருந்து வெளியேறிய முதல் விமானம்!
கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி அமெரிக்க படை ஆப்கானை விட்டு வெளியேறியவுடன் 10 நாட்கள் கடந்து அதாவது இன்றைய தினம் காபூல் விமான நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
தலிபான்கள் தமது அரசை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் இடம்பெறுகின்ற முதலாவது விமான சேவை இதுவாகும். காபூலில் இருந்து கட்டார் தலைநகர் தோஹாவிற்கு பறந்த இந்த விமானத்தில் வெளிநாட்டு பயணிகள் சென்றுள்ளனர்.
ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தலிபான்கள் வெளிநாட்டவருக்கு நாட்டை விட்டு வெளியேற காலக்கெடு விதித்திருந்தது. ஆனால் பல்வேறு நெருக்கடி நிலைமை காரணமாக சிலருக்கு
நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை. தற்போது அவ்வாறான சுமார் 113 பேரே இன்றைய தினம் நாட்டைவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த 43 பேரும் நெதர்லாந்தைச் சேர்ந்த 13 பேரும் மீட்கப்பட்டிருப்பதாக அந்தந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
அண்மையில் கட்டாருக்கு சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன், ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை மீட்பதற்கு உதவும்படி கட்டாரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் இன்றையதினம் இவ்வாறு பயணிகள் சென்றுள்ளனர்.
Reviewed by Irumbu Thirai News
on
September 10, 2021
Rating:














