பரீட்சை விண்ணப்பத்திற்கு மேலும் கால அவகாசம் இல்லை: இதுவரை விண்ணப்பித்த விண்ணப்பிக்காத பாடசாலைகள்:
Irumbu Thirai News
September 16, 2021
இந்த வருடத்திற்குரிய உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்காக விண்ணப்பிக்க கூடிய கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த போது, 
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படமாட்டாது. 
இதுவரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக 6,835 பாடசாலைகள் விண்ணப்பித்துள்ளன.  இன்னும் 2,339 பாடசாலைகள் விண்ணப்பிக்கவில்லை. 
மேலும் உயர்தர பரீட்சைக்கு 
இதுவரை 2,938 பாடசாலைகள் விண்ணப்பித்துள்ளன. இன்னும் 338 பாடசாலைகள் விண்ணப்பிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சை விண்ணப்பத்திற்கு மேலும் கால அவகாசம் இல்லை: இதுவரை விண்ணப்பித்த விண்ணப்பிக்காத பாடசாலைகள்:
 
        Reviewed by Irumbu Thirai News
        on 
        
September 16, 2021
 
        Rating: 
 
        Reviewed by Irumbu Thirai News
        on 
        
September 16, 2021
 
        Rating: 












