கோத்தாபய சிங்கப்பூர் சென்ற விமானம்: படைத்தது வரலாற்று சாதனை!
கோதாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது உலகில் அதிகமான நபர்களால் கண்காணிக்கப்பட்ட விமானம் என்ற சாதனையை படைத்துள்ளது.
விமானங்களின் கண்காணிப்பு தொடர்பான தகவல்களை வழங்கும் இணையத்தளமான Flightradar24.com என்ற தளத்தின் தகவல்களின்படி மாலைதீவின் மாலேயிலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட சவுதி அரேபியாவுக்கு சொந்தமான Saudia SV- 788 என்ற விமானம் 12,200 ற்கும் அதிகமான பேரால் கண்காணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் உலகின் கவனத்தையே திருப்பியுள்ளது என்பதற்கு இந்த விடயம் நல்ல சான்று என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை கோதாபய ராஜபக்ச சென்ற விமானம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 7.17 க்கு தரையிறங்கியுள்ளது.
இதேவேளை கோதாபயவின் வருகை தொடர்பில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,
கோட்டாபய தனிப்பட்ட பயணமாகவே சிங்கப்பூர் வருகை தந்துள்ளார். அவர் எவ்வித அரசியல் தஞ்சமோ புகழிடமோ கோரவில்லை. அவ்வாறு அரசியல் புகழிடம் சிங்கப்பூரால் பொதுவாக வழங்கப்படுவதும் இல்லை. அவர் சிங்கப்பூரில் எவ்வளவு காலம் தங்குவார் என தெரியவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Irumbu Thirai News
on
July 14, 2022
Rating:














