திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-11-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 31ம் நாள் அதாவது புதன்கிழமை (04) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • சவூதி அரேபியாவில் 150 இடங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 
  • கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு, இரண்டு மாதத்திற்கும் அதிக காலம் எடுக்கும் என சுகாதர அமைச்சின் பொது சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு. 
  • நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெறும் கிளினிக் நோயாளர்களின் மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி இன்று முதல் ஆரம்பமானது.
  • பொரளை பொலிஸின் இதுவரை 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொரளை பொலிஸிற்கு பொது மக்கள் செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. 
  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பத்தரமுல்ல பகுதியில் உள்ள கல்வி அமைச்சகம் நாளை (5) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிப்பு. 
  • முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் என்பனவற்றில் அனுமதி வழங்கப்பட்ட கைத்தொழிற்சாலைகளுக்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வது அவசியமில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • மேல் மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள, வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் செயற்பாடுகள் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் இடைநிறுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் www.motortraffic.wp.gov.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து, அதன் ஊடாக வாகன வருமான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் 5 பேருக்கு கொரோணா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய வௌ்ளை / சிவப்பு சம்பா (வேகவைத்தது) - 94 ரூபா, பச்சை சம்பா (சிவப்பு / வௌ்ளை) - 94 ரூபா, நாட்டரிசி - 92 ரூபா, பச்சை அரிசி (வெள்ளை / சிவப்பு) - 89 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

  • இதுவரை கொழும்பு மாநகரசபை ஊழியர்கள் 83 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண்ணொருவர் நேற்று (03) தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு இன்று (04) கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் 24 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதேவேளை, கொழும்பு 13 ஐச் பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய நபர் ஒருவர் வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (03) உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த நபரின் மரணம் covid-19 தொற்று காரணமாக ஏற்படாத காரணத்தினால் அதனை கொவிட் 19 மரணமாக கருத முடியாது என சுகாதார சேவை பணிப்பாளர் அறிவிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.