தனிப்பட்ட விடுமுறையில் பதியப்படும் என அச்சுறுத்தல் விடுக்க எந்த அதிபருக்கும் அதிகாரம் இல்லை - மஹிந்த ஜயசிங்க
பாடசாலைக்குச் செல்லாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையில் பதியப்படும் என அச்சுறுத்தல் விடுக்க எந்த அதிபருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜெயசிங்க இன்று தனது முகநூல் நேரலையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல பிரதேசங்களிலும் அதிபர்கள் ஆசிரியர்களைக் கட்டாயம் வரவேண்டும் என்று கூறுவதோடு வராவிட்டால் தனிப்பட்ட விடுமுறையில் பதியப்படும் என அச்சுறுத்தல் விடுத்து தேவையற்ற நெருக்கடிகளை அவர்களுக்கு தோற்றுவிப்பதும் அறியக்கிடைக்கிறது
கல்வி அமைச்சர் கூறினார்... இந்த வாரம் ஆசிரியர்கள் தன்னார்வ அடிப்படையில் சுய விருப்பத்தின் பேரில் கடமைக்கு செல்வார்கள் என இவ்வாறான பின்னணியில் எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறை வழங்கப்படும் என அச்சுருத்தல் விடுக்க எந்த அதிபருக்கும் கல்வி அமைச்சால் அதிகாரம் வழங்கப்படவில்லை. இவ்வாறு செய்வது பிரச்சினைகளை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தனிப்பட்ட விடுமுறையில் பதியப்படும் என அச்சுறுத்தல் விடுக்க எந்த அதிபருக்கும் அதிகாரம் இல்லை - மஹிந்த ஜயசிங்க
Reviewed by Irumbu Thirai News
on
June 20, 2022
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
June 20, 2022
Rating:

No comments: