புதிய சுற்றறிக்கையின் படி ஒரு அரச நிறுவனத்திலிருந்து எத்தனை பேர் வெளிநாடு செல்லலாம்?


அரச ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்காக சம்பளமற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு இம்மாதம் 22ஆம் திகதி வெளியிட்டிருந்தது. 

"சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு / வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறை வழங்குதல்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை தொடர்பான விளக்கங்களை வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. 

இதில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த நிகழ்வில் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.


அதாவது வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அரச ஊழியர் தமது விதவைகள் அனாதைகள் ஓய்வூதிய நிதியத்திற்கு மாதாந்தம் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.

மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் வதியாதோர் வெளிநாட்டு கணக்கு திறந்து அதன் ஊடாக நாட்டுக்கு மாதாந்தம் பணம் அனுப்ப வேண்டும்.

அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)


நிறைவேற்று தரமில்லாத புதிதாக இணைந்த அரச ஊழியர்களும் தமது தகுதிகாண் காலம் முடிவடைவதற்கு முன்னர் வெளிநாடு செல்லலாம். அவ்வாறு சென்றவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்ததன் பின்னர் தகுதிகாண் காலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் எத்தனை பேரை வெளிநாடு செல்ல அனுமதிப்பது என்பது தொடர்பான தீர்மானம் அந்த நிறுவனம் நியமிக்கும் குழு மூலமே எடுக்கப்படும். அதன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து எத்தனை பேரை உச்ச அளவில் வெளிநாடு செல்ல அனுமதிப்பது என்ற விடயம் தீர்மானிக்கப்படும்.


புதிய சுற்றறிக்கையின் படி ஒரு அரச நிறுவனத்திலிருந்து எத்தனை பேர் வெளிநாடு செல்லலாம்? புதிய சுற்றறிக்கையின் படி ஒரு அரச நிறுவனத்திலிருந்து எத்தனை பேர் வெளிநாடு செல்லலாம்? Reviewed by Irumbu Thirai News on June 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.