போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்கல் தொடர்பான அறிவித்தல் (தமிழ் மற்றும் சிங்களத்தில் முழுமையாக)
போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்கல் தொடர்பாக கல்வியமைச்சால் 16-6-2022 அன்று வெளியிடப்பட்ட அறிவித்தலின் முழுமையான தமிழ் வடிவத்தை இங்கே தருகிறோம்.
சகல மாகாண அரச சேவை ஆணைக்குழு செயலாளர்கள்,
சகல மாகாண கல்விச் செயலாளர்கள்,
சகல மாகாண கல்விப் பணிப்பாளர்கள்,
சகல வலயக் கல்விப் பணிப்பாளர்கள்,
சகல தேசிய பாடசாலை அதிபர்கள்.
நிலவும் போக்குவரத்து சிக்கல் காரணமாக ஆசிரியர்களுக்கு சலுகை வழங்கல்
நிலவும் போக்குவரத்து சிக்கல் காரணமாக ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் பின்வரும் விடயங்களுக்கு உட்பட்ட விதத்தில் குறித்த ஆசிரியர்களின் கோரிக்கையை கருத்திற் கொண்டு வசதியான பாடசாலைக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்குவதற்கு கருத்தில் கொள்ளுமாறு இத்தால் அறியத்தருகிறேன்.
(1) அடிப்படை விடயம்:
1.1 ஒரே மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கிடையில் மற்றும் தேசிய பாடசாலை - மாகாண
பாடசாலைகளுக்கிடையிலான சேவை இணைப்பு செய்வதற்கான அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
1.2 இரண்டு மாகாணங்களுக்கு இடையில் மாகாண பாடசாலை ஆசிரியர்களை இணைப்பு செய்வது, சம்பந்தப்பட்ட மாகாணங்களின் மாகாண அரச சேவை ஆணைக்குழு செயலாளர்களின் அனுமதியுடன் செய்வதற்கு யோசனை முன்வைக்கப்படுகிறது.
1.3 மாகாணங்களுக்கு இடையில் இடம்பெறும் தேசிய பாடசாலைகளுக்கிடையிலான இணைப்பு கல்வி அமைச்சின் கல்வி பணிப்பாளர் (ஆசிரியர் இடமாற்றம்) மூலம் இடம்பெற வேண்டும்.
(2) மேலுள்ள சகல வழிகளிலும் இணைப்பு செய்தல், பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு தடை இல்லாத முறையில் சம்பந்தப்பட்ட இரு பாடசாலைகளினதும் அதிபர்களின் எழுத்துமூல உடன்பாட்டுடன் மாத்திரம் இடம்பெற வேண்டும்.
(3) இணைப்பு நிபந்தனைகள்:
3.1 கோரிக்கை விடுக்கும் ஆசிரியர் குறித்த பாடசாலையில் மேலதிகம் என்றால், அவர் அல்லது அவளுக்காக பதிலீடு பெற்றுக் கொடுப்பது அவசியம் இல்லை.
3.2 கோரிக்கை விடுக்கும் ஆசிரியர் மேலதிகமானவர் இல்லை என்றால் பொருத்தமான பதிலீடு பெற்று கொடுத்ததன் பின்னர் இணைப்பு மேற்கொள்ள வேண்டும்.
3.3 அதிபர்களின் உடன்பாட்டுடன் பரஸ்பர இடமாற்றம் மேற்கொள்ளும் முறையிலேயே இந்த இணைப்பும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(4) கர்ப்பிணிகள் மற்றும் வைத்திய சிபாரிசுக்கு அமைய மேற்கொள்ளும் இணைப்பு குறித்த வைத்திய சான்றிதழின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு மேற்கொள்ள வேண்டும். (2007/ 20 சுற்றுநிருபம் 3.4.111 ற்கு அமைய)
(5) மாகாணக் கல்விப் பணிப்பாளர் மூலம் தேசிய பாடசாலைகள் தொடர்பில் மேற்கொள்ளும் இணைப்பு பற்றிய கடிதத்தின் பிரதி கல்வி அமைச்சின் கல்வி பணிப்பாளர் (ஆசிரியர் இடமாற்றம்) க்கு அனுப்ப வேண்டும்.
(6) இந்த இணைப்பானது 2022-12-31 ம் திகதிவரை மட்டும் செல்லுபடியான விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(7) இன்னும் இந்த இணைப்பு மேற்கொள்ளலானது குறித்த பாடசாலைக்கான இடமாற்றம் அல்ல என்பதுடன் இணைப்பு காலப்பகுதியினுள் ஆசிரியரின் சம்பளம் நிரந்தர சேவை நிலையத்தால் கொடுக்கப்பட வேண்டும்.
எம்.என். ரணசிங்க.
செயலாளர்.
கல்வி அமைச்சு.
குறித்த அறிவித்தலின் சிங்கள மொழி மூலத்தை கீழே காணலாம்.
போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்கல் தொடர்பான அறிவித்தல் (தமிழ் மற்றும் சிங்களத்தில் முழுமையாக)
Reviewed by Irumbu Thirai News
on
June 20, 2022
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
June 20, 2022
Rating:


No comments: