Middle East Updates- 7 ( முக்கிய தகவல்கள் சுருக்கமாக)



லெபனானில் ஈரான்-ஹிஸ்புல்லா கூட்டு:
கடந்த ஒரு மாதத்திற்குள் நூற்றுக்கணக்கான ஈரானிய I/R/G/C அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ரகசியப் பாதைகள் வழியாக லெபனானுக்குள் களமிறக்கப்பட்டுள்ளனர். லெபனானின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காவல் துறையில் உள்ள Hஸ்புல்லா ஆதரவாளர்களைப் பயன்படுத்தி, இவர்களுக்குப் போலியான ஆவணங்கள் மற்றும் லெபனானிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, இவர்களின் அடையாளங்கள் லெபனானியர்களாக மாற்றப்பட்டுள்ளன. 

அலியல் தாஹிர் மலைப் பகுதி மோதலும் ஈரானின் எச்சரிக்கையும்: 
தெற்கு லெபனானின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அலியல் தாஹிர் மலைப் பகுதியில் இ/ஸ்/ரேல் மேற்கொண்ட தரைவழித் தாக்குதலை Hsபுல்லாவின் ரத்வான் போராளிகள் முறியடித்துள்ளனர். இதனால் இஸ்ரேலியப் படைகள் பின்வாங்க நேரிட்டது. இந்தப் பகுதியை இஸ்ரேல் முழுமையாகக் கைப்பற்ற முயன்றால், அது லெபனானின் இறையாண்மைக்குச் சவாலாக அமையும் என்பதால், கடுமையான ஏவுகணைப் பதிலடித் தாக்குதலை நடத்துவோம் என்று Iரான் எச்சரித்துள்ளது. 

ஈராக் எதிர்ப்பு குழுவின் இறுதி எச்சரிக்கை:
ஈராக்கின் அல்நுஜபா எதிர்ப்பு குழுவின் பொதுச்செயலாளர், அமெரிக்கப் படைகள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஈராக்கின் வான்பரப்பு மற்றும் நிலப்பரப்பிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தேதிக்குப் பிறகும் அமெரிக்கப் படைகள் அங்கிருந்தால் கடுமையான தாக்குதல்களை மீண்டும் நடத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 


ஹொர்மூஸ் ஜலசந்தி சர்ச்சை:
ஹொர்மூஸ் ஜலசந்தி தங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்பும் அமெரிக்க நிர்வாகமும் பிரசாரங்களை மேற்கொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அங்கிருந்து எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது பொய் என்றும், அன்று ஈரானிய தாக்குதலுக்கு உள்ளாகி ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் குவைத்தின் நான்கு எண்ணெய் கப்பல்கள் தீப்பற்றி எரிந்ததாகவும் ஈran தெரிவித்துள்ளது. இவ்வாறாயினும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை


அமெரிக்க ராணுவத்தில் ராஜினாமாவும் தேர்தல் அழுத்தமும்: 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போரை நீடிப்பதால் அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், 40-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் தளபதிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 99 டாலராக உயர்ந்ததால் அமெரிக்கப் பங்குச்சந்தை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நவம்பர் இடைத்தேர்தல் முடியும் வரை ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த வேண்டாம் என ட்ரம்பிற்கு நிதி நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்துள்ளன. 

யேமனில் ஹவுதிகளின் தரைவழி முன்னேற்றம்: 
யேமனில் ஹவுதி ராணுவத்தினர் சவுதி அரேபிய கூட்டுப் படைகளுக்கு எதிராகத் தீவிர தரைவழி, ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். தாய்ஸ் (Taiz) தெற்குப் பகுதியில் உள்ள ஒரு முக்கிய பாலத்தைத் தகர்த்து, சவுதி கூட்டுப் படைகளைச் சூழ்ந்து தாக்கி அழித்ததுடன், அங்குள்ள இரண்டு முக்கியமான மூலோபாயப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மீண்டும் விமான சேவை:
ஈரானின் கெஷ்ம் தீவுக்கும் துபாய்க்கும் இடையிலான விமானச் சேவைகள், ஆறு மாத கால இடைநிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளதாக ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.


Previous:


Middle East Updates- 7 ( முக்கிய தகவல்கள் சுருக்கமாக) Middle East Updates- 7 ( முக்கிய தகவல்கள் சுருக்கமாக) Reviewed by Irumbu Thirai News on September 04, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.