திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-11-2020 நடந்தவை...
irumbuthirai
November 13, 2020
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 39ம் நாள் அதாவது வியாழக்கிழமை (12) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- மேல் மாகாணத்தில் பயணத் தடை விதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. ஆனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டுச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கான இயலுமை உள்ளது. குறிப்பாக எவரெனும் இன்றைய தினத்திற்குள் மேல் மாகாணத்தில் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு மீண்டும் தமது பகுதிகளுக்கு செல்ல நினைத்தால் அது முடியாது. அவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மேல் மாகாணத்திற்குள் தங்கியிருந்து அதன் பின்னர் அவர்களின் இடங்களுக்கு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.
- தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உடனடியாக PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் இல்லாவிடின் வேறு இடத்திற்கு மாற்றுமாரும் கோரி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகள் சிலர் கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டவுடன் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
- டிரோன் கெமரா மூலம் கண்காணிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு, மோதர பகுதியில் வைத்து தனிமைப்படுத்தலை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- வீட்டினுள் உயிரிழக்கும் எந்தவொரு நபரின் சடலமும் மரண பரிசோதகரின் அல்லது நீதவானின் பரிந்துரையின் பேரில்தான் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவிப்பு.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார இறுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என கூறினார். பண்டிகை ஒன்று இருப்பதை அறிந்தும் நாம் அவ்வாறு செயற்பட போவதில்லை. நாட்டு மக்கள் எத்தகைய நிலைமைகள் இருந்த போதிலும் புத்திசாதூர்யமாக செயல்படுவார்கள் என்றும் ராணுவ தளபதி தெரிவித்தார்.
- தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டலை சுகாதார அமைச்சு வெளியிட்டது.
- தொலைக்கல்வி முறையின் மூலம் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பாடசாலை தொலைக்கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு, பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை வகுக்கப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.
- மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,226 ஆக அதிகரிப்பு.
- கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சரீரத்தை புதைப்பதற்கு அனுமதிகோருவது, அடிப்படைவாதம் ஆகும் என்றும், அதற்கு அனுமதிவழங்கப்படக்கூடாது என்றும் அகில இலங்கை இந்து சம்மேளனம் என்ற அமைப்பின் தலைவர் நாரா டி அருள்காந்த் தெரிவிப்பு.
- எதிர்வரும் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவிப்பு. அத்துடன் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அலுவலக மற்றும் ஏனைய புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிப்பு.
- காலி - பூசா சிறைச்சாலையில் கைதிகள் மூவருக்கு கொரோனா தொற்றுறுதி. இதற்கமைய சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரிப்பு.
- பத்தரமுல்லை பகுதியில் யாசகர் ஒருவருக்கு கொரோனா. அத்துடன் குறித்த யாசகருடன், தொடர்புகளை பேணிய 8 பேர் நிட்டம்புவ தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- மேலும் இரு கொரோனா மரணங்கள் அறிவிப்பு. (1) கொழும்பு-12, 54 வயது ஆண். (முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழப்பு) (2) மீகொட பகுதி. 45 வயது ஆண். (முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழப்பு) இத்துடன் மொத்த மரணம் 48 ஆக அதிகரிப்பு.
- இன்றைய தினம் மாத்திரம் 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நாட்டின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,723ஆக அதிகரிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
November 13, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
November 13, 2020
Rating:














