பரீட்சைக்கு தயாராக போதுமான கால அவகாசம்... மேல் மாகாணத்தில் 130 நாட்களே பாடசாலை...
irumbuthirai
April 10, 2021
இந்த வருடத்திற்கான சகல தேசிய பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதோடு பாடசாலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடத்தின் தேசிய பரீட்சைகள் எதுவும் உரிய காலத்தில் இடம்பெறவில்லை. 
அதேபோன்று இந்த வருடத்திற்கான தேசியப் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன. 
வருடத்திற்கு பொதுவாக 200 நாட்கள் பாடசாலைகள் நடக்க வேண்டும்.
ஆனால் இவ்வருடம் அதை 150 நாட்களாக குறைக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் அது 130 நாட்களாக குறைந்துள்ளது. 
எனவே இவ்வருடம் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சைக்கு தயாராக போதுமான கால அவகாசம்... மேல் மாகாணத்தில் 130 நாட்களே பாடசாலை...
 
        Reviewed by irumbuthirai
        on 
        
April 10, 2021
 
        Rating: 
 
        Reviewed by irumbuthirai
        on 
        
April 10, 2021
 
        Rating: 












