ஆசிரியர் தினத்தன்று மாபெரும் போராட்டம் - ஜோசப் ஸ்டாலின்
Irumbu Thirai News
October 03, 2021
இம்மாதம் 6ஆம் திகதி ஆசிரியர் தினமாகும். எனவே நாடளாவிய ரீதியில் 312 வலயக்கல்வி காரியங்களுக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இணைந்து தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்று தருமாறு கோரியும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்குமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர் தினத்தன்று மாபெரும் போராட்டம் - ஜோசப் ஸ்டாலின் 
 Reviewed by Irumbu Thirai News
        on 
        
October 03, 2021
 
        Rating:
 
        Reviewed by Irumbu Thirai News
        on 
        
October 03, 2021
 
        Rating: 
 Reviewed by Irumbu Thirai News
        on 
        
October 03, 2021
 
        Rating:
 
        Reviewed by Irumbu Thirai News
        on 
        
October 03, 2021
 
        Rating: 
 


 


 

 

 


 


 

 


 


 


 

 

 
 
 
