ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த ஆசிரியை: அஞ்சலி செலுத்தும் பாடசாலைகள்!
Irumbu Thirai News
November 11, 2021
நேற்று முன்தினம்(9) தேசிய எதிர்ப்பு தினமாக கருதப்பட்டு நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.
இதில் அதிபர்கள் ஆசிரியர்களும் தமது சம்பள முரண்பாடுகளை தீர்க்கக் கோரி நாடளாவிய ரீதியில் உள்ள சகல வலயக்கல்வி காரியங்களுக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெனியாய மத்திய கல்லூரியின் ஆரம்பப்பிரிவு ஆசிரியை வருணி அசங்கா திடீரென
மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்.
எனவே தனது நோய் நிலைமையையும் கருத்திற் கொள்ளாது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உயிரிழந்த அந்த ஆசிரியைக்கு நாளைய தினம் அஞ்சலி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாளைய தினம் வட மாகாண பாடசாலைகளில் 5 நிமிடம் மௌன அஞ்சலி இவருக்காக செலுத்தப்படும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த ஆசிரியை: அஞ்சலி செலுத்தும் பாடசாலைகள்!
Reviewed by Irumbu Thirai News
on
November 11, 2021
Rating: