பரப்பப்படும் வதந்திகள்.... சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் கடற்படை...


இலங்கை கடற்படை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக கடற்படை தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 


இலங்கை கடற்படை தலைமையகம் 
கொழும்பு 
2020.05.06 

செய்தி பணிப்பாளர் அலைவரிசை பிரதானி 
ஊடக அறிக்கை 

 1. கடற்படை கொவிட் 19 தடுக்கும் செயற்பாடுகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டிருப்பதாக சமூக ஊடகங்கள் மூலமும் செய்தி இணையதளங்கள் சில வற்றிலும் உண்மைக்குப புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் வேலைத்திட்டத்தின் தேசிய பொறிமுறைக்குள் கடற்படையினால் மேற்கொள்ளப்படும் எந்தவித பணிகளிலிருந்தும் கடற்படை விலகிக் கொள்ளவில்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளிலும் கடற்படை ஆகக்கூடிய பங்களிப்பை வழங்கி செயல்படுவதை இதன் மூலம் வலியுறுத்துகின்றோம். 

2. இதேபோன்று இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதை மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

டப்ளியு.எம்.ஐ.ஆர்.எல்.சூரியபண்டார 
லெப்டினன் கமாண்டர் 
ஊடக இணைப்பு அதிகாரி கடற்படை தளபதிக்கு பதிலாக 

பிரதி:- கொவிட் 19 தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரி 
             அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் 
              இராணுவ இணைப்பு அதிகாரி, பாதுகாப்பு அமைச்சு 
             பணிப்பாளர் ஊடகம் பாதுகாப்பு அமைச்சு

(அ.த.தி)

பரப்பப்படும் வதந்திகள்.... சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் கடற்படை... பரப்பப்படும் வதந்திகள்.... சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் கடற்படை... Reviewed by irumbuthirai on May 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.