வெட்டுக்கிளிகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை



இலங்கையின் கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சல் புள்ளிகளைக்கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில் பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னொருவ விவசாய தகவல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் சனத் எம். பண்டார இது குறித்து எச்சரிக்கை செய்துள்ளார். ஆப்பிரிக்கவில் இருந்து இந்தியா வரையில் தற்போது வியாபித்துள்ள பாலை வன வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாயிகள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறான வெட்டுக்கிளிகளை கண்டால் 1920 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் என்று விவசாய தினைக்கள பணிப்பாளர் நாயகம் கலாசிதி எம்.டப்ளியு .எம். வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
வெட்டுக்கிளிகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை வெட்டுக்கிளிகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.