அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு: நிதி அமைச்சரை சந்தித்த உப குழு:
irumbuthirai
August 21, 2021
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவானது நேற்றைய தினம்(20) நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது கல்வி அமைச்சின் செயலாளரும் கலந்துகொண்டார்.
சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உப குழுவின் அங்கத்தவர்களுள் ஒருவரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும,
இதுதொடர்பான யோசனைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவானது கட்டங்கட்டமாக கடந்த நாட்களில் தொழிற்சங்கங்களை சந்தித்திருந்தது.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு: நிதி அமைச்சரை சந்தித்த உப குழு:
Reviewed by irumbuthirai
on
August 21, 2021
Rating: