சுபோதினி அறிக்கைக்கு பதிலாக வேறு ஏதும் உண்டா? அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் அமைச்சரவை குழுவிற்குமிடையிலான கடைசி சந்திப்பு! நடந்தது என்ன?


அமைச்சரவை உப குழுவிற்கும் அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையிலான கடைசி கட்ட சந்திப்பு நேற்றைய தினம்(18) அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் நடைபெற்றது. 

இந்த சந்திப்பில் உப குழுவில் உள்ள அங்கத்தவர்களான விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர, டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்து கொண்டனர். 

தொழிற்சங்கங்கள் சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சேவை சங்கத்தைச் சேர்ந்த மஹிந்த ஜயசிங்க உட்பட இன்னும் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், 
சுபோதினி அறிக்கைக்கு பதிலாக வேறு ஏதும் உண்டா? என்று அமைச்சரவை உபகுழு கேட்டது. அதற்கு நாம் கேட்டோம் உங்களிடம் ஏதாவது மாற்று திட்டம் உண்டா என்று. அதற்கு அவர்கள் சரியான பதில் தரவில்லை. நாம் சொன்னோம் அரசாங்கம் தருவதாக கூறியதை தான் நாம் கேட்கிறோம் என்று. அதற்கு அவர்கள் நிதியமைச்சரிடமும் கலந்துரையாடிவிட்டு எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதாக எம்மிடம் தெரிவித்தனர் என்று கூறினர். 

எவ்வாறாயினும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவு வரும்வரை எமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். 

இதேவேளை இந்த சந்திப்பின் நிறைவில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர், 
இதுவரை நாம் பல்வேறு தொழிற்சங்கங்களோடு கட்டங்கட்டமாக சிறந்த முறையில் சந்திப்புகளை நடத்தினோம். இன்றைய தினம் கடைசிக்கட்ட சந்திப்பு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இது தொடர்பில் நிதி அமைச்சரிடம் கலந்துரையாடல் செய்ய இருக்கிறோம். அதன்பின்னர் சம்பள ஆணைக்குழுவுடனும் பேச வேண்டியிருக்கிறது. பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பான அறிக்கைகளை நாங்கள் வழங்க இருக்கிறோம் என தெரிவித்தனர்.
சுபோதினி அறிக்கைக்கு பதிலாக வேறு ஏதும் உண்டா? அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் அமைச்சரவை குழுவிற்குமிடையிலான கடைசி சந்திப்பு! நடந்தது என்ன? சுபோதினி அறிக்கைக்கு பதிலாக வேறு ஏதும் உண்டா? அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் அமைச்சரவை குழுவிற்குமிடையிலான கடைசி சந்திப்பு! நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on August 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.