பதவி விலகினார் மலேசிய பிரதமர்! நடந்தது என்ன?


மலேசிய பிரதமர் முஹிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்திலிருந்து பிரதான கட்சி ஒன்று விலகியதன் காரணமாக அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது. 

இதனால் பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளது. பிரதமர் தனது பதவி விலகளை மலேசிய மன்னருக்கு அறிவித்துள்ளார். 
முஹிதீன் யாசின் வெறும் 17 மாதங்கள் மாத்திரமே பதவியில் இருந்தார். 

கொரோனா பெருந்தொற்று தீவிரத்தை தடுக்கத் தவறியது, சர்ச்சைக்குரிய ஊழல் புகார்கள், கூட்டணி கட்சியின் அழுத்தம் என பல முனைகளிலும் அவரது அரசு நெருக்கடியை சந்தித்தது. 17 மாதங்களுமே அவருக்கு நெருக்கடியாகவே இருந்தது. 

மலேசியாவில் கொரோனா தாக்கம் காரணமாக இதுவரை 12,510 பேர் இறந்துள்ளதாகவும் அங்கு நிலைமையை சமாளிக்க முடியாத நிலைக்கு 
அரசு இயந்திரங்கள் தள்ளப்பட்டதற்குக் காரணம் மொஹிதின் யாசினின் தவறான ஆளுகை என்றும் பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. 

இதனிடையே பிரதமரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட மாமன்னர் அடுத்த அரசாங்கம் அமையும் வரை காபந்து அரசாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
பதவி விலகினார் மலேசிய பிரதமர்! நடந்தது என்ன? பதவி விலகினார் மலேசிய பிரதமர்! நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on August 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.