ஆப்கானின் தற்போதைய நிலை (முழுமையான அப்டேட்)



தலைநகரின் நிலை: 

ஆப்கான் தலைநகர் காபூல் தற்போது வழமைக்கு திரும்பியிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உணவகங்கள் கடைகள் என்பன திறக்கப்பட்டிருந்ததுடன் பொது மக்களும் ஏராளமானோர் நகருக்கு வந்து சென்றுள்ளனர். புர்கா என்ற முழுமையாக மறைக்கப்படும் ஆடை இல்லாமலும் பெண்கள் வந்து சென்றுள்ளனர். இந்த ஆடையை முன்னர் தலிபான்கள் பெண்களுக்கு கட்டாயமாக்கியிருந்தனர். 

முதல் ஊடக சந்திப்பு: 

தலிபான்கள் முதன்முறையாக ஊடக சந்திப்பை நடத்தியுள்ளனர். அதில் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அனைவரையும் மன்னித்து விட்டோம். யாரையும் கொல்ல மாட்டோம். வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் எங்களுக்கு எந்த எதிரிகளும் வேண்டாம். யாரும் நாட்டை விட்டு வெளியேறத் தேவையில்லை. அரச ஊழியர்கள் தமது பணியை வழமைபோன்று தொடரலாம். முந்தைய தலைமுறை தலிபான்களை விட தற்போதைய தலிபான்கள் மாற்றங்களை விரும்புகிறவர்கள். அந்த வகையில் அமைதியான மாற்றங்கள் நிகழும் என்ற கருத்துப்பட ஊடக சந்திப்பில் தெரிவித்தனர். 


ஜலாலாபாத் போராட்டம்: 

ஜலாலாபாத் என்ற இடத்தில் பெருமளவான பொதுமக்கள் ஒன்றுகூடி தலிபான்களின் கொடிகளுக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை வைத்துகொண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தை கலைந்து செல்லும்படி தலிபான்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் கேட்காததன் காரணமாக அங்கே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

வீடு வீடாக சோதனை: 

இதனிடையே தலிபான்கள் வீடு வீடாக சென்று ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.பொதுமன்னிப்பு என்று அறிவித்துவிட்டு ஏன் இவ்வாறு நடக்கிறார்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. 


தாலிபான்களும் ஒத்துழைக்கிறார்கள்: 

ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டினரை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு தாலிபான்களும் ஒத்துழைப்பு வழங்குவதாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


மாறுபட்ட செய்தி: 

விமான நிலையம் அமெரிக்க கூட்டுப் படையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் விமான நிலையத்திற்கு செல்லும் பல்வேறு இடங்களில் தலிபான்கள் இருந்து கொண்டு அங்கே செல்பவர்களை தடுப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. உரிய நபர்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தாலும் அவர்கள் விமான நிலையம் செல்லும் விடையத்தில் இவர்கள் தடங்கல்களை ஏற்படுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேட்டோ மற்றும் அமெரிக்க படைகளுடன் நெருக்கமாக செய்யப்பட்டவர்களை தேடும் நடவடிக்கையே இது எனவும் சந்தேகிக்கப்படுகிறது. 

விமான நிலையத்தில் மரணித்தோர் எண்ணிக்கை: 
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விமான நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர் என தலிபான் அமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் துப்பாக்கிச்சூடு அல்லது கூட்ட நெரிசல் என அவர் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு: irumbuthirainews.com
ஆப்கானின் தற்போதைய நிலை (முழுமையான அப்டேட்) ஆப்கானின் தற்போதைய நிலை (முழுமையான அப்டேட்) Reviewed by irumbuthirai on August 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.