வீடுகளில் சிகிச்சை: கண்காணிக்க 1500 வைத்தியர்கள்:


வீடுகளில் சிகிச்சை பெறுகின்ற கொவிட் தொற்றாளர்களை கண்காணிப்பதற்காக எதிர்வரும் சில வாரங்களில் 1500 வைத்தியர்களை சேவையில் ஈடுபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

தற்போது வீடுகளில் சிகிச்சை பெறுகின்ற கொவிட் தொற்றாளர்களை கண்காணிப்பதற்காக 900 வைத்தியர்கள் மற்றும் 28 விசேட வைத்தியர்களை சேவையில் 
ஈடுபடுத்தியுள்ளதாக, சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை மருத்துவ சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அயந்தி கருணாரத்ன தெரிவித்தார். 

வீடுகளில் சிகிச்சை பெறுகின்ற தொற்றாளர்கள், 1390 என்ற தொலைபேசி இலக்கத்துடன் பதிவை மேற்கொள்வதன் மூலம் தமக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். 

நேற்று (18) மாலை வரையிலும் 5110 தொற்றாளர்கள் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் அயந்தி கருணாரத்ன தெரிவித்தார். அத்துடன், கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி முதல் நேற்று (18) வரையிலும் இவ்வாறு பதிவு செய்துள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 16,282 ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
வீடுகளில் சிகிச்சை: கண்காணிக்க 1500 வைத்தியர்கள்: வீடுகளில் சிகிச்சை: கண்காணிக்க 1500 வைத்தியர்கள்: Reviewed by irumbuthirai on August 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.