ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி?



ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு கொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் முன்மொழிந்துள்ளது. ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து இன்று (26) வரை கொவிட் தொற்றுடைய எவரும் சமூகத்திலிருந்து இனம் காணப்படாமை நாடு அடைந்த வெற்றியாகும் என்று குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். 
முதலாவது கட்டத்தின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள 

ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளின் உள்ளக பயன்பாட்டுக்காக (In house Dining) திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன் முன்னேற்றத்திற்கு ஏற்ப பதிவுசெய்யப்படாத நிறுவனங்களையும் இராணுவத்தின் உதவியுடனும் பொதுச் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்புடன் சிற்றுண்டிச் சாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
சுற்றுலா பயணிகள் அதிகமுள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமையளித்து வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி பெற்ற சுற்றுலா பொலிஸ் பிரிவொன்றை அமைப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கினார். 
வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கொவிட் ஒழிப்பு செயலணி ஒன்றுகூடிய போதே மேற்படி விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி? ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி? Reviewed by irumbuthirai on May 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.