பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் .



தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் பாடங்களை எவ்வாறு நிறைவுசெய்வது என்பது தொடர்பாக பல ஆலோசனைகள் இருக்கின்றன. 

1. ஒவ்வொரு நாளும் பி.ப. 03.00 மணிவரை பாடசாலைகளை நடத்துவது. 

2. வாரத்தில் ஏழு நாட்களும் பாடசாலைகளை நடத்துவது. ஆனால் நேரசூசியில் பல மாற்றங்களை செய்வது அதாவது ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் நான்கு நாட்கள் மாத்திரம் பாடசாலைக்கு வந்தால் போதும் என்ற நிலையில் நேரசூசியில் மாற்றங்களை ஏற்படுத்துவது. 

3. ஆகஸ்ட் விடுமுறையை இல்லாமல் செய்வது. 

எனவே இதில் எது பொருத்தமாக இருக்குமோ அது நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
முகநூல் நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் . பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் . Reviewed by irumbuthirai on May 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.