உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர்



தற்போதைய நிலைமையில் உயர்தரப் பரீட்சை எவ்வாறு நடத்தப்படும் என்பது தொடர்பாகவே அனேகமானவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்காக இரண்டு முறைகள் பின்பற்றப்படலாம். 
ஒன்று, நிறைவுசெய்த பாட அலகுகளுக்கு மாத்திரம் பரீட்சை நடத்துவது மற்றையது பரீட்சையை பிற்போடுவது ஆகும். 
நிறைவு செய்த பாட அலகுகளுக்கு மாத்திரம் பரீட்சை நடாத்தப்படும் பொழுது, 

இந்த உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் முறையாக தோற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே முழு பாடத்தையும் படித்து முடித்திருப்பார்கள். அதேபோன்று உயிரியல் போன்ற சில பாடங்களுக்கு உள்ள பாட அலகுகளில் கடைசியாக இருக்கின்ற அலகுகளுக்கு இலகுவாக புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள கூடியதாக இருப்பதாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அப்படியும் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. 
அந்த அடிப்படையில் எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாத முறையிலேயே இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
தனியார் இணைய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
அமைச்சரின் கூற்றை பார்க்கும் பொழுது முதலாவது தீர்வு சாத்தியமில்லாத விடயமாக இருப்பதாக இருந்தால் இரண்டாவது தீர்வுக்கே செல்ல வேண்டியதாக இருக்கும் என்பது இங்கே புலனாகின்றது. அதாவது பரீட்சை பெரும்பாலும் பிற்போடப்படலாம்.

உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர் உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர் Reviewed by irumbuthirai on May 30, 2020 Rating: 5

1 comment:

  1. 1st yr syllabus mattum examku vandhaal nallam but 1st yearlavum sila paadangal niraivu peradhu ullana☹☹☹☹

    ReplyDelete

Powered by Blogger.