"நம்புவதற்குக் கடினமாக உள்ளது": தொண்டமானின் மறைவு குறித்து இந்திய உயர்ஸ்தானிகர்:



அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு நம்புவதற்கு கடினமாக உள்ளது என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
உயர்ஸ்தானிகர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், 
இன்று மாலைதான் ஆறுமுகம் தொண்டமான் உடனான சந்திப்பு இடம்பெற்றது. அதில் இந்திய வீட்டுத்திட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அத்தோடு அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருக்கின்றார். 
ஆறுமுகம் தொண்டமானின் முகநூல் பக்கத்திலும் இந்த சந்திப்பு 

தொடர்பாகவே இறுதியாக பதிவேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சரவை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் மாரடைப்பு காரணமாக தளங்கம வைத்தியசாலையில் இன்று அகாலமரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இறக்கும் போது அவருக்கு வயது 55 ஆகும். 
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல் பிரமுகர்கள் தளங்கம வைத்தியசாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
"நம்புவதற்குக் கடினமாக உள்ளது": தொண்டமானின் மறைவு குறித்து இந்திய உயர்ஸ்தானிகர்: "நம்புவதற்குக் கடினமாக உள்ளது": தொண்டமானின் மறைவு குறித்து இந்திய உயர்ஸ்தானிகர்: Reviewed by irumbuthirai on May 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.