திங்கள் முதல் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் ஒன்லைன் முறையில்...?


தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளிலும் ஒன்லைன் முறையில் செயற்பாடுகளை 1 அல்லது 2 வாரங்கள் நடத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. 
 
இதேவேளை, எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு நாளை (17) அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இன்று அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், 

எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், நாளாந்தம் மேலதிக கொடுப்பனவாக ரூபா. 1200 ரூபா வழங்கவும், விடைத்தாள் மதிப்பீட்டிற்கான கொடுப்பனவை 25 வீதத்தால் அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார். 
 
இதேவேளை, 2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையத்தளத்தில் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாணவர் ஒரு மேல்முறையீட்டு படிவத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் அந்த விண்ணப்பத்தின் மூலம் 3 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
திங்கள் முதல் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் ஒன்லைன் முறையில்...? திங்கள் முதல் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் ஒன்லைன் முறையில்...? Reviewed by Irumbu Thirai News on June 16, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.