தரம் 1 மாணவர் அனுமதி - 2023 (விண்ணப்பமும் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களும்)


2023 ம் வருடத்திற்காக தரம் 1க்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பம் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள் என்பவற்றை கல்வி அமைச்சு இன்றைய தினம் (16) வெளியிட்டுள்ளது. 
 
  • சகல தகுதிகளும் 2022 ஜூன் 30ஆம் திகதிக்கு செல்லுபடியானதாக அமையும். 
 
  • 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதியன்று பிள்ளையின் வயது 05 வருடங்கள் பூரணமாய் இருத்தல் வேண்டும். 2023 ஜனவரி மாதம் 31ஆம் திகதியன்று 06 அல்லது 06 வயதை விடக்கூடிய பிள்ளைகள், 6 வயதுக்கு குறைந்த தகைமைகளையுடைய சகல பிள்ளைகளையும் அனுமதித்த பின்னரே சேர்த்துக் கொள்ளப்படுவர். 
 
  • வகுப்பு ஒன்றில் இருக்க வேண்டிய உச்ச மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆகும். 
 
  • சகல விண்ணப்பதாரிகளும் குறைந்தபட்சம் தமக்கு அண்மித்த மாகாண பாடசாலைகள் 03 உட்பட பாடசாலை 06 க்காவது விண்ணப்பித்தல் கட்டாயமாகும். பாடசாலைகளை பெயரிடும் போது அனைத்து விண்ணப்பங்களும் பாடசாலைகளின் விருப்பு முன்னுரிமைக்கேற்ப குறிப்பிடுதல் வேண்டும். 

ஒவ்வொரு பிரிவின் கீழும் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் விகிதாசாரம்
 
(1) பாடசாலைக்கு அண்மித்து வசிப்போரின் பிள்ளைகள் 50 %.
 
(2) குறித்த பாடசாலையில் பழைய மாணவர்களாக உள்ள பெற்றோரின் பிள்ளைகள் 25 %. 
 
(3) தற்போது குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் சகோதர / சகோதரிகள் 14%.
 
(4) கல்வி அமைச்சின் கீழ் அரச பாடசாலைக் கல்வியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவோரின் பிள்ளைகள் 6 %. 
 
(5) அரச சேவை தேவையின் பொருட்டு இடமாற்றம் பெற்ற அரச / கூட்டுத்தாபன / நியதிச்சட்ட சபை/ அரச வங்கி அலுவலர்களின் பிள்ளைகள் 4 %. 
 
(6) பிள்ளையுடன் வெளிநாட்டில் வசித்து விட்டு வந்தவர்களின் பிள்ளைகள் 1 % 
 
விண்ணப்ப முடிவுத் திகதி: 16-07-2022. 
 
விண்ணப்பத்தையும் அறிவுறுத்தல்களையும் பார்வையிடவும் டவுன்லோட் செய்துகொள்ளவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
தரம் 1 மாணவர் அனுமதி - 2023 (விண்ணப்பமும் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களும்) தரம் 1 மாணவர் அனுமதி - 2023 (விண்ணப்பமும் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களும்) Reviewed by Irumbu Thirai News on June 16, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.