அதிபர் ஆசிரியரின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தமது சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்: போராட்டத்தை ஆரம்பித்த கல்வி நிர்வாக சேவை சங்கம்!
Irumbu Thirai News
January 26, 2022
அதிபர், ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தமது சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கத்தினால் இன்று தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சுகயீன விடுமுறை மூலம் தமது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் கடுமையாக்குவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் இன்று மாலை தொழிற்சங்க அங்கத்தவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் நீல் அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியரின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தமது சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்: போராட்டத்தை ஆரம்பித்த கல்வி நிர்வாக சேவை சங்கம்!
Reviewed by Irumbu Thirai News
on
January 26, 2022
Rating: