மத அனுஷ்டானங்களுடன் அடக்கம் செய்யப்பட்ட கொரோனா ஜனாஸாக்கள்: தொடங்கியது உரிமை கோரும் படலம்:


பல்வேறு வகையான நீண்ட போராட்டத்திற்குப் பின் கொரோனா ஜனாஸாக்கள் இன்றைய தினம் (5) முதன் முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. 
ஒன்பது பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் பலத்த பாதுகாப்புடன், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலுக்கு அமைய அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 
அட்டாளைச்சேனை ஒருவர், காத்தான்குடி ஒருவர், அக்கரைப்பற்று ஒருவர், சாய்ந்தமருது மூன்று பேர், 
கோட்டைமுனை ஒருவர், ஏறாவூர் இரண்டு பேருமாக மொத்தம் ஒன்பது பேரின் ஜனாஸாக்களே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன. 
இதேவேளை சடலங்களை அடக்கம் செய்யும் போது, மத அனுஸ்டானங்களை மேற்கொள்ளவும், அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் தங்களால்தான் அடக்குவதற்கான அனுமதி கிடைத்தது என பல தரப்பும் விசேடமாக 20ற்கு வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  உரிமை கொண்டாட ஆரம்பித்துள்ளமையை காணக்கூடியதாக இருக்கிறது. 
 ஆனால் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்ககோரி கடந்தகாலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டன. பல்வேறு நாடுகள் உட்பட சர்வதேச அமைப்புகளும் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தன. ஜெனிவா வாக்கெடுப்பு நடக்கவிருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியது குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை, கிளிநொச்சி – இரணைத்தீவு பகுதியிலும் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மக்கள் அதற்கு தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருவதுடன் இன்று மூன்றாவது நாளாகவும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மத அனுஷ்டானங்களுடன் அடக்கம் செய்யப்பட்ட கொரோனா ஜனாஸாக்கள்: தொடங்கியது உரிமை கோரும் படலம்: மத அனுஷ்டானங்களுடன் அடக்கம் செய்யப்பட்ட கொரோனா ஜனாஸாக்கள்:  தொடங்கியது உரிமை கோரும் படலம்: Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.