பல்கலைக்கழக அனுமதி: சுதந்திரத்தின் பின் முதன்முறையாக ஏற்பட்ட மாற்றம்:


இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்ட 10588 மாணவர்களுக்குரிய பல்கலைக்கழக வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான கூடுதல் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.02.03) ஆலோசனை வழங்கினார். 
பல்கலைக்கழகங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது குறித்து அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 
இவ்வாண்டில் 41000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்கள், சுதந்திரத்தின் பின்னர் முதல் முறையாக இம்முறை 
10588 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், சகல பல்கலைக்கழக துணைவேந்தர்களின் ஆதரவினாலேயே இவை அனைத்தையும் நிர்வகிக்க முடிந்ததென்றும், பல்கலைக்கழக அமைப்பின் பௌதீக மற்றும் மனித வளங்களை நிர்வகிக்க மேலதிகமாக சுமார் 5 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 
 இவ்வாறு தேவைப்படும் கூடுதல் நிதியை கட்டம் கட்டமாக பல்கலைக்கழக அமைப்புக்கு வெளியிடுமாறு பிரதமர் அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறையை பொது திரைசேறி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து கலந்துரையாடலின் மூலம் தீர்மானித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். 
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்பலைக்கழகத்தில் விரிவுரைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு விரிவுரையாளர்களதும், மாணவர்களதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்கள், பல்கலைக்கழகங்களை மூடுதல் எனும் நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக அனுமதி: சுதந்திரத்தின் பின் முதன்முறையாக ஏற்பட்ட மாற்றம்: பல்கலைக்கழக அனுமதி: சுதந்திரத்தின் பின் முதன்முறையாக ஏற்பட்ட மாற்றம்: Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.