கருத்தரங்கிற்கு சென்ற மாணவன் சடலமாக மீட்பு!
Irumbu Thirai News
October 27, 2026
ஹொரணை தேசிய பாடசாலையின் 16 வயது மாணவர் மியுறு நிம்சரா காணாமல்போன நிலையில், நேற்று (26) மொரட்டுவை எகொடஉயன கடற்கரையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
கடந்த 25ஆம் திகதி கருத்தரங்கிற்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்ற அவர் திரும்பாததால் உறவினர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தனர்.
உடலை அடையாளம் உறுதி செய்த காவல்துறை, அவர் அணிந்திருந்த ஆடைகள் உடல் மீட்கப்பட்ட இடத்திற்கு வெளியே காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. கடலில் நீராடச் சென்றதாகத் தகவல் இல்லாததால் மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.
கருத்தரங்கிற்கு சென்ற மாணவன் சடலமாக மீட்பு!
Reviewed by Irumbu Thirai News
on
October 27, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
October 27, 2026
Rating:

.jpeg)














