தேசிய கல்வி நிறுவகத்திற்கு (NIE) 150 ஆசிரியர்கள்:


தேசிய கல்வி நிறுவகத்திற்கு (NIE) 150 ஆசிரியர்களின் சேவைகளைப் பெறல்: 

மேற்படி விடயம் தொடர்பாக நேற்றைய தினம் (26) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தை இங்கு தருகிறோம். 

"21 ஆம் நூற்றாண்டில் எதிர்கொள்ள நேரிட்டுள்ள சவால்களுக்கு வெற்றிகரமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிபுணத்துவத்துடன் கூடிய மாணவர் பரம்பரையை நாட்டில் உருவாக்குவதற்குத் தேவையான கல்வி முறைமையை உருவாக்குவதற்காக மேற்கொள்ள வேண்டிய கல்வி மறுசீரமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக தேசிய கல்வி நிறுவகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 
குறித்த மறுசீரமைப்புக்கள் மூலமும் கற்பித்தல் மூலோபாயங்களில் விசேட மாற்றங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்பு 1,2,6,8 மற்றும் 10 ஆம் தரங்களுக்காக 2023 ஆம் ஆண்டிலும் 
3,4,5,7 மற்றும் 11 ஆம் தரங்களுக்காக 2024 ஆண்டிலும் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 
குறித்த பணிகளுக்காக தற்போது தேசிய கல்வி நிறுவகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் போதுமனாதல்ல என்பதுடன், அதற்காக அரச பாடசாலைகளில் ஆசிரியர் சேவையிலுள்ள குறிப்பிட்ட பாடவிதானங்களுடன் தொடர்புடைய, தேர்ச்சியுடன் கூடிய அனுபவம் வாய்ந்த 150 ஆசிரியர்களை தேசிய கல்வி நிறுவகத்திற்கு இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது."
Source : அரசாங்க தகவல் திணைக்களம்.
தேசிய கல்வி நிறுவகத்திற்கு (NIE) 150 ஆசிரியர்கள்: தேசிய கல்வி நிறுவகத்திற்கு (NIE) 150 ஆசிரியர்கள்: Reviewed by irumbuthirai on July 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.