செயலிழக்கும் சினோவெக் தடுப்பூசி: ஆய்வில் வெளியான தகவல்!


சீனாவினால் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியான சினோவெக் (Sinovac) தடுப்பூசி தொடர்பான ஆய்வொன்றை சீனாவைச் சேர்ந்த ஆய்வுக்குழுவொன்று மேற்கொண்டது. 
அதாவது 18 - 59 வயதுக்குட்பட்டவர்களை ஆய்வு செய்த பொழுது அதிர்ச்சியளிக்கும் விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது. அதாவது சினோவெக் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி 6 மாதங்களில் உடலில் எதிர்ப்பு சக்தி 
35% என்ற குறைவான அளவே எஞ்சியிருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் மீண்டும் ஒருமுறை தடுப்பூசி செலுத்தும் பட்சத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 
எனவே தற்போது தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவில் இவ்வாறு சினோவெக் 2 தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் அல்லது மொடர்னாவும் துருக்கியிலும் மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை பயன்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செயலிழக்கும் சினோவெக் தடுப்பூசி: ஆய்வில் வெளியான தகவல்! செயலிழக்கும் சினோவெக் தடுப்பூசி: ஆய்வில் வெளியான தகவல்! Reviewed by irumbuthirai on July 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.