தரம் 1 ற்கான அனுமதி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப முடிவு திகதி:
irumbuthirai
June 08, 2021
2022 ம் வருடத்திற்காக தரம் - 01ற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி இந்த மாதம் (ஜூன்) 30ஆம் திகதி ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த விண்ணப்ப முடிவுத் திகதி மேலும் ஒரு மாதத்தால் நீடிக்கப்படுவதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவுகின்ற கொரோனா பரவல் மற்றும் பயணத் தடை காரணமாக பெற்றோர்களுக்கு இதில் உள்ள சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தரம் 1 ற்கான அனுமதி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப முடிவு திகதி:
Reviewed by irumbuthirai
on
June 08, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
June 08, 2021
Rating:

















