இணையவழிக் கல்விக்காக மலையேறும் மாணவர்கள்:


நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளமையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒருபக்கம் அரசாங்கம் மாணவர்களுக்கு வளவாளர்களைக் கொண்டு தொலைக்காட்சி ஊடாக பாடங்களை நடாத்துகின்றது. 
இன்னொருபுறம் ஆசிரியர்களினால் அதிகளவில் இணையவழி ஊடாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முன்பள்ளி முதல் உயர்தரம் வரை சகல கற்பித்தல் நடவடிக்கைகளும் இணையவழி ஊடாகவும் நடைபெறுகின்றன. 
 இணையவழி மூலம் கற்பதில் மாணவர்கள் பெரும் சிரமங்களை 
எதிர்நோக்கி வருவதாக அவ்வப்போது பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. 
அந்தவகையில் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முருத்தெட்டுவ, யோகம உட்பட 06 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இணைய வசதியை பெற்றுக்கொள்ளக்கூடிய வலையமைப்பு வசதிகள் இன்மையால் தமது இருப்பிடத்திலிருந்து உயர்ந்த இறப்பர் மலைப்பிரதேசங்களுக்கு சென்று இணைய வழியில் கல்வியை தொடர்கின்றனர். 
இதற்காக இவர்கள் காட்டுவழியின் ஊடாகவே பயணிக்கவேண்டும். தற்பொழுது தொடர்ந்து மழை பெய்துவருவதால் மலை உச்சியில் கூடாரம் அமைத்து கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழிக் கல்விக்காக மலையேறும் மாணவர்கள்: இணையவழிக் கல்விக்காக மலையேறும் மாணவர்கள்: Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.