வேகமாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: சொல்லும் செய்திகள் என்ன?


இலங்கையில் நாளுக்குநாள் அறிவிக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
நேற்றைய தினம் (11) மாத்திரம் 101 மரணங்கள் அறிவிக்கப்பட்டன. அத்துடன் மொத்த மரணங்கள் 2000ஐ கடந்து 2011 ஆக அதிகரித்துள்ளது. 

இலங்கையின் கொரோனா மரணங்களிலே... 
முதல் 500 மரணங்கள் - 343 நாட்களில்,
2வது 500 - 72 நாட்களில்,
3வது 500 - 13 நாட்களில்,
4வது 500 - 10 நாட்களில் 
பதிவாகியுள்ளன.

நேற்று அறிவிக்கப்பட்ட 101 மரணங்கள்.. 

பெப்ரவரி 6 முதல் ஜூன் 9 வரையான காலப்பகுதியில் பதிவானவை. 

30 பேர் வீடுகளில், 14 பேர் வைத்தியசாலைகளில் சேர்ப்பதற்கு முன்னர்,

 

57 பேர் வைத்தியசாலைகளில் உயிரிழந்துள்ளனர். 

பெண்கள் - 48 ஆண்கள் - 53. 

வயது 20 இற்கு கீழ் - 00 
வயது 20 - 29 - 01 
வயது 30 - 39 - 03 
வயது 40 - 49 - 02 
வயது 50 - 59 - 14 
வயது 60 - 69 - 30 
வயது 70 - 79 - 25 
வயது 80 - 89 - 21 
வயது 90 - 99 - 05 
வயது 99 இற்கு மேல் - 00 

அமுகொட, ஹிரிம்புர, வக்வெல்ல, திக்வெல்ல, காலி, தியதலாவை, வத்தளை, ஜாஎல, மினுவாங்கொடை, சந்தலங்காவ, தெவுந்தர, கம்பஹா, கல்கிசை, ஹோமாகம, பிலிந்தலை, வாழைச்சேனை, வேபோட, பசறை, வெலம்பட, புப்புரஸ்ஸ, நாவலப்பிட்டி, தொலஸ்பாகை, நுவரெலியா, ஹற்றன், றாகம, பொலன்னறுவை, பண்டாரகம, நேபொட, மில்லனிய, உனவட்டுன, தெஹிவளை, மஹரகம, கொழும்பு 15, கெஸ்பேவ, கந்தபொலை-நுவரெலியா, டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலியா, கொட்டகலை, நாத்தாண்டிய, அக்கறைப்பற்று, கரந்தெனிய, கட்டுகஸ்தோட்டை, அங்கொட்டாவல, ஆண்டியம்பலம், மட்டக்களப்பு, உடபுஸ்ஸல்லாவ, ரத்தொலுகம, சீதுவ, அரநாயக்க, புலத்சிங்கள, அங்குருவாத்தோட்ட, மொரட்டுவை, மடவல, ஹப்பகஸ்தென்ன, நாகொட-களுத்துறை, மத்துகம, பேருவளை, கித்தலவ-களுத்துறை, மக்கொன, உக்குவெல, மாத்தளை, கட்டுகித்துல, கோவின்ன, ஹொரணை, வலல்லாவிட்ட, பொம்புவல, கண்டி, வெரல்லேகம, வேயங்கொடை, வெலிகம, பூஸ்ஸ, ரத்கம, மாரவில, படல்கம, அம்பகஸ்துவ, எகொட உயன, தும்மலசூரிய, திகன்னேவ. மற்றும் அங்குலான போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

மே 20 இல் 26,567 PCR பரிசோதனைகள். அதில் 3,441 நோயாளர்கள். ஜூன் 10 இல் 19,828 PCR பரிசோதனைகள். அதில் 2,715 நோயாளர்கள் அடையாளம். எனவே PCR பரிசோதனைகளை குறைக்காமல் அதிகரித்தால் இன்னும் நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்படுவர். ஆகவே மரணிப்போரின் எண்ணிக்கையையும் குறைக்கலாம். 

மரணிப்போரில் அதிகமானோர் 60 வயதிற்கு மேற்பட்டோர். எனவே அவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கினால் மரணத்தில் 90% ஐ குறைக்கலாம் என்பது வைத்திய நிபுணர்களின் கருதத்து. 
வைத்தியசாலைக்கு செல்வதற்கு தயங்காமல், காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறும் பொழுது மரண விகிதத்தை குறைக்கலாம்.

பயண கட்டுப்பாட்டை மீறுவது சாதனையாக கருதாமல் முறையாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றினால் பாதிப்புகளை குறைக்கலாம்.

வேகமாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: சொல்லும் செய்திகள் என்ன? வேகமாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: சொல்லும் செய்திகள் என்ன? Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.