பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே


எதிர்வரும் 3 வருடங்களுக்குள் பால்மா உற்பத்தியில் தன்னிறைவு கண்டு வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதி செய்யப்படுவது முற்றாக நிறுத்தப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 
2021 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நாவலப்பிட்டியில் நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
எங்களது நாட்டில் சுமார் இரண்டரை இலட்சம் பால் தரும் மாடுகள் காணப்படுகின்றன. மொத்த பால் தேவையில் 35 வீதமானவை 
மாத்திரமே எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏனைய அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. நியூசிலாந்தில் இருந்து அதிகமாக பால்மாக்களை இறக்குமதி செய்யும் நாடு இலங்கைதான். 
ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பு பால் உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட நாடு ஆகும். எனவே அந்த அடிப்படையில் அதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.