ரிஷாட் பதியுதீனை சந்தித்தமை பற்றி சமல் ராஜபக்ஷவின் விளக்கம்


அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில் எனது அமைச்சுக்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆராயும் முகமாக வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 
இதன் போது வவுனியா மாவட்ட செயலகத்திற்கு புதிய கேட்போர் கூடம் திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 
இந்த நிகழ்வில் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டமை தொடர்பில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேயே அவர் கலந்து கொண்டார். மாறாக அரசுடன் இணைவதற்கான நடவடிக்கையோ அல்லது 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதற்கான நடவடிக்கையோ அல்ல என்பதை எங்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இத்தால் தெரிவித்துக்கொள்கிறேன் என அமைச்சர் சமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீனை சந்தித்தமை பற்றி சமல் ராஜபக்ஷவின் விளக்கம் ரிஷாட் பதியுதீனை சந்தித்தமை பற்றி சமல் ராஜபக்ஷவின் விளக்கம் Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.