கல்வி அமைச்சின் முக்கிய தீர்மானங்கள்: சுற்றுநிருபம் விரைவில்...


அடுத்த வருடம் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய சில தீர்மானங்களை கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது. 
இதுதொடர்பான விரிவான சுற்றுநிறுபம் இவ்வாரம் வெளியாகும் என தெரிய வருகிறது. 
குறித்த தீர்மானங்கள் சில பின்வருமாறு: 
  • உரியமுறையில் தவணைப் பரீட்சை நடக்காவிட்டாலும் சகல மாணவர்களும் வகுப்பேற்றப்படுவர். 
  • இவ்வருடம் முடிக்கப்படாத பாட அலகுகளை முடிப்பதற்கு அடுத்த வருடம் முதல் இரு வாரங்களை பயன்படுத்தலாம். 
  • தரம் 11 மாணவர்கள் மார்ச் வரை பாடசாலைக்கு வரலாம். இவர்களுக்கு இடவசதி போதாமல் இருந்தால் தரம் 8, 9 ஆகிய மாணவர்களை தொகுதி அடிப்படையில் மாத்திரம் பாடசாலைக்கு வரவழைக்கலாம். 
  • தரம் 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு புதிய மாணவர் அனுமதி பெப்ரவரி வரை பிற்போடப்பட்டுள்ளது. 
  • இவ்வருடம் 3ம் தவணை விடுமுறை டிசம்பர் 23 வழங்கப்பட்டு ஜனவரி 4 மீண்டும் பாடசாலை ஆரம்பமாகும். 
  • அடுத்த வருடம் முதலாம் தவணையில் இணைப்பாடவிதான செயற்பாடுகள் இல்லை. கல்விச் சுற்றுலா விளையாட்டுப்போட்டி எதற்கும் அனுமதி இல்லை.
கல்வி அமைச்சின் முக்கிய தீர்மானங்கள்: சுற்றுநிருபம் விரைவில்... கல்வி அமைச்சின் முக்கிய தீர்மானங்கள்: சுற்றுநிருபம் விரைவில்... Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.