கல்வியியற் கல்லூரி ஆசிரியர் நியமனம்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ஆசிரியர் சங்கம்:


தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்காக இம்முறை Online முறையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
இந்த விண்ணப்ப செயன்முறையில் காணப்படும் பல்வேறு குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது. 
அதாவது, 
  • விண்ணப்பத்தை ஒன்லைன் முறையில் பூர்த்தி செய்யும் போது சரியான தகவல்களை வழங்கினாலும் அவை பிழையான தகவல்கள் என காண்பிப்பதாக கூறப்படுகிறது. 
  • விண்ணப்பதாரியின் மாகாணத்தில் வெற்றிடம் உள்ள பாடசாலைகள் இருந்தாலும் வேறு மாகாணங்களையே காண்பிப்பதாக கூறப்படுகிறது. 
  • அதேபோன்று 2017 ல் இருந்த வெற்றிடங்கள் அல்லது வேறு வெற்றிடங்களை காண்பிப்பதாகவும் குற்றச்சாட்டு. 
  • பிரச்சினைகளுக்காக அழைக்குமாறு வழங்கப்பட்டுள்ள இலக்கங்கள் எதற்கும் பதில் அளிக்க உரிய அதிகாரிகள் யாரும் இல்லை. 
  • இந்த சிக்கல்களை பலமுறை உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. 
இந்த ஒன்லைன் முறையிலான விண்ணப்பம் நாளை 17ம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தாலும் தற்போது அது இம்மாதம் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்படத்தக்கது. 
குறித்த Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
கல்வியியற் கல்லூரி ஆசிரியர் நியமனம்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ஆசிரியர் சங்கம்: கல்வியியற் கல்லூரி ஆசிரியர் நியமனம்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ஆசிரியர் சங்கம்: Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.