திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-10-2020 நடந்தவை...



திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 13ம் நாள் அதாவது சனிக்கிழமை (17) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா வைரஸ் தொற்றானது நாட்டில் இன்னும் சமூக பரவலை ஏற்படுத்தவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றின் பரம்பலை இதுவரையில் சரியாக இனங்காணவில்லை எனவும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளை முடக்க வேண்டிய அவசியம் உள்ளதுடன், நாடு முழுவதையும் முடக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் PCR பரிசோதனை தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும், ஊடக குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தனியார் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவிப்பு. 

  • இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து இலங்கையர்களும் தாம் வெளிநாடு செல்வதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னதாக PCR பரிசோதனைளை செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவிப்பு. 
  • கொவிட் -19 தொற்று நிலைமை காரணமாக நாட்டின் அனைத்து மிருக்காட்சி சாலைகளையும் இன்று (17) முதல் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானம். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு. 
  • கொரோனா தொடர்பில் அறிந்து கொள்வதற்கு 24 மணிநேரமும் இயங்கும் 1999 என்ற அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து பொலன்னறுவ வைத்தியசாலையின் 22 ஆம் இலக்க வார்ட் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசர தேவைகளை தவிர வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வைத்தியசாலை தாதியர்கள் 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. 
  • கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் சிறந்த மதிப்பீட்டை செய்ய தவறினால்; எதிர்வரும் நாட்களில் முழு நாட்டையும் முடக்க வேண்டிய அபாய நிலை ஏற்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவிப்பு. 
  • மினுவங்கொட ஆடை தொழிற்சாலை கொவிட் கொத்தணி உருவானமை தொடர்பில் விசாரணை செய்ய அரச புலனாய்வு அதிகாரிகளை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு. 
  • 13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டதோடு வைத்தியசாலையில் இரண்டு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 12 ஆம் திகதி இருதய நோய் காரணமாக வைத்தியசாலையில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு. 
  • வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 6 பேர் அடங்கலாக இன்றைய தினம் (17) 121 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது. மினுவாங்கொடை கொத்தணி 2014 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.