திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-10-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 16ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானம் இழந்தோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கும் செயற்திட்டம் இன்று முதல் முன்னெடுப்பு. 
  • கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை திறப்பு. 
  • கம்பஹா மாவட்டத்தில் காவற்துறை ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 388 ஆக அதிகரிப்பு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு. 

  • யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஷன் தெரிவிப்பு. 
  • கொழும்பு - கப்பல் தளத்தில் கடமையாற்றும் மற்றுமொரு நபருக்கும் கொரோனா தொற்று உறுதி. அந்த வகையில் இதுவரையில் கொழும்பு - கப்பல் தளத்தில் மாத்திரம் 21 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. 
  • லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 வயது குழந்தை மற்றும் தாய் தந்தை ஆகியோருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிப்பு. 
  • கட்டுநாயக்க வர்த்தக முதலீட்டு வலயத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா. அதன்படி, கட்டுநாயக்க முதலீட்டு வர்த்தக வலயத்தில் இதுவரையில் மொத்தமாக 268 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • உடனடியாக அமுலாகும் வகையில் குளியாபிட்டி, பன்னல, கிரிஉல்ல, தும்மலசூரிய, நாரம்மல ஆகிய காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் காவற்துறை ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டது. 
  • கொழும்பு - கோட்டை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் துறை பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
  • அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி சுகாதார விதிமுறைகள் பாராளுமன்றத்தில் பின்பற்றப்படுவதில்லை என குற்றம்சாட்டினார் எதிர்க்கட்சித் தலைவர். இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றம் பொது இடம் அல்ல என்றார். இதன் பின்னர் இருவருக்கும் இடையில் பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. 
  • தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் 120 பேர் மினுவாங்கொடை பிரேண்டிக்ஸ் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.