ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளலாமா? சபாநாயகரின் பதில்...


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு சபை அமர்வுகளில் பங்கேற்க இடமளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்தார். 
இதற்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் 'பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான கோரிக்கை சட்ட ரீதியில் முன்வைக்கப்படுமாயின் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்' என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 
நேற்று காலை தெஹிவலையில் வைத்து குற்ற புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பா.உ. ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 
27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதன்போது ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண் வைத்தியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஏற்கனவே தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிமன்றம் இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை ஒத்தி வைத்தது. 
2019 ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்காளர்களை வாக்களிப்பதற்காக அரச பேருந்துகளில் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளலாமா? சபாநாயகரின் பதில்... ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளலாமா? சபாநாயகரின் பதில்... Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.