திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-10-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 14ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • அடுத்தவாரம் வினைத்திறனாக கொவிட்19 பரவலை கட்டுப்படுத்த முடியுமாக இருந்தால், அது மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொத்தணியை கட்டுப்படுத்துவதற்கான பிரதான புள்ளியாக அமையும் என்று, கொவிட்19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிப்பு. இதேவேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரிப்பு. 

  • கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் காரணமாக வருமானத்தை இழந்த நபர்களுக்கு 5000 ரூபா வீதம் வழங்க அரசு தீர்மானம். அதன்படி, சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்காக 400 மில்லியன் ரூபா ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு. 

  • கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கொழும்பு தேசிய மருத்துவமனையின் 34 மற்றும் 36 ம் இலக்க வார்டுகள் தற்காலிகமாக மூடல். 

  • கம்பஹாவில் உள்ள பிரபலமான மகளிர் பாடசாலை ஒன்றின் பரீட்சை மையத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவருக்கு கொவிட் 19 தொற்று என அறிவிப்பு. அத்துடன் குறித்த மாணவி பரீட்சை எழுதுவதற்காக ஐ.டி.எச். மருத்துவமனையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு. 

  • மதுகம பிரதேச செயலகத்தின் ஓவிடிகம, பதுகம மற்றும் பதுகம புதிய காலனி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் விகாராதிபதி ஒருவரும் மற்றும் 04 தேரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே மேற்படி மூன்று கிராமங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக ராணுவ தளபதி அறிவித்தார். 

  • கொழும்பு, ஆமர் வீதி காவல்நிலையத்தின் காவற்துறை அதிகாரி ஒருவரின் குடும்ப உறுப்பினர் இருவருக்கு கொரோனா தொற்றுதியானதை தொடர்ந்து, குறித்த காவல்நிலையத்தின் 16 காவற்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிப்பு. 

  • இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிப்பு. 

  • மத்துகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி நிறுவனத்தின் சேவையாளருக்கு கொவிட்-19 தொற்றுதியானது. 

  • வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றில் கடமையாற்றிவரும் ஊழியர் இருவர் மற்றும் அவர்களது தாயார் இருவருக்கும் கொரோனா தொற்றுறுதியானது. 

  • கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் இந்த முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் 7 மாணவர்களுக்கு இதுவரை கொவிட்-19 தொற்றுறுதி என அறிவிப்பு. 

  • கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குளியாபிடிய பகுதியிலுள்ள கயியால, ஊருபிடிய, என்னருவ மற்றும் பல்லேவல ஆகிய நான்கு கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு விதிப்பு. 

  • இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் சேர்த்து 18.10.2020 இரவு 09:30 வரையான தகவல்களின்படி இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 5538 ஆக உயர்வு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.