திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-10-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 18ம் நாள் அதாவது வியாழக்கிழமை (22) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா அச்சம் அதிகரித்து வருவதால் கொழும்பு-மெனிங் சந்தை நடவடிக்கைகளை இன்று (22) காலை 10.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. 
  • கஹவத்தை-மாதம்பே பகுதியில் உள்ள மீன்சந்தை ஒன்றும் தற்காலிகமாக மூடப்பட்டது. 
  • உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 26ம் திகதி காலை 5 மணி வரை மட்டக்குளி, முகத்துவாரம், புளுமெண்டல் வெல்லம்பிட்டி மற்றும் கிரேண்பாஸ் ஆகிய பொலிஸ் வலயங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக COVID 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவிப்பு. 

  • ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்கள், கல்வி, சுகாதார மற்றும் பாதுகாப்பு பணிக்குழாமினருக்கு போக்குவரத்துக்கான வாய்ப்பு காணப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • வெவ்வேறு நாடுகளுக்கிடையிலான துதரக சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த வெளிவிவகார அமைச்சு தீர்மானத்துள்ளதாக தெரிவிப்பு. 
  • பேலியகொடை மொத்த விற்பனை மீன் சந்தைக்கு மீன் வாங்கச் சென்ற பம்பலப்பிட்டி காவல் நிலைய அதிகாரிகள் 4 பேர் சுய தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தப்பட்டனர். 
  • இலங்கை சுங்கத்திணைக்களத்தில் கடமையாற்றும் இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. இதனால் கொழும்பு துறைமுகத்தின் பொருள் கொள்வனவு நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்கபிரிவின் பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரட்ன இதனை தெரிவிப்பு. 
  • கொட்டாஞ்சேனை காவற்துறை அதிகார பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணி முதல் அமுல். 
  • 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நடைபெறவிருந்த அரச சேவையின் நாடாளாவிய சேவைக்கான செயல்திறன் தடைதாண்டல் பரீட்சை covid-19 வைரஸ் தொற்று பரவும் தொற்று நிலைமையினால் மறு அறிவித்தல் வரையில் ஒத்திவைப்பு. 
  • பேலியகொடை பொது மீன் சந்தைக்குச் சென்றவர்கள் உடனடியாக பொது சுகாதார அதிகாரிகளை சந்தித்து பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவிப்பு. 
  • இலங்கையில் 14வது கொரோனா மரணம் பதிவானது. 50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
  • கேகாலை மாவட்டத்தில் 23 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் குமார விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலை வைத்தியசாலையின் வௌி நோயாளர் பிரிவின் மூன்று வைத்தியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கேகாலை வைத்தியசாலையின் வௌி நோயாளர் பிரிவின் மூன்று வைத்தியர்களுக்கு கடந்த தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதில் ஒரு வைத்தியரின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரின் மகனுக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது. குறித்த வைத்தியரின் மகளுக்கு மற்றும் பணிப்பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவர்கள் அனைவரும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
  • காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் பயன்படுத்தும் கால எல்லையே இதன்படி நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த கால பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்கள், திகதி அடிப்படையில் மேலும் 3 மாத காலங்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு. 
  • கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக கொட்டாவை நகர சபைக்குட்பட்ட மீன் சந்தையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
  • வழக்கு நிறைவடைந்த பின்னர் பானந்துறை நீதவான் நீதிமன்றில் ஒரே போத்தலில் பாணந்துறை - தெற்கு காவற்துறை சார்ஜன்ட் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியின் அதிகாரி ஆகியோர் நீர் அருந்தியுள்ளனர். இந்தநிலையில், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடருவதற்கு பாணந்துறை நீதவான் நடவடிக்கை எடுத்துள்ளார். 
  • இன்றைய தினம் 309 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.