சச்சின் ? கோலி? யார் சிறந்தவர்?

( சற்று நீளமான பதிவு பொறுமையாக வாசிக்கவும்)

(**ODI மாத்திரமே கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது)

251 எனும் இலக்கை விரட்டி அடிக்க வேண்டிய நிலையில் சச்சின் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கிறார். கேப்டன் அசாருடின் டக் இல் ஆட்டம் இழக்க அடுத்தடுத்து விக்கட்கள் சரிய ஆரம்பிக்கின்றன! இந்தியா 120/8 என்ற நிலைக்கு சரிகிறது! செமி பைனலில் தோல்வியுற்று 1996 உலக கோப்பையில் இருந்து வெளியேறுகிறது!  அந்த உலக கோப்பை தொடர் முழுவதும் சச்சின் உம் அசாருடினுமே பேட்டிங்கில் அதிகம் பிரகாசிக்க ஏனைய ப்லேயர்கள் பெரிதளவில் பங்களிக்க வில்லை! இந்தியாவிற்கு இவ்வாறான ஓர் நிலை தான் 1992 உலக கோப்பையிலும்! 1983 உலக கோப்பையை வென்ற பிட்பாடு இந்தியாவின் பல நட்சத்திர வீரர்கள் கிரிகெட் இற்கு விடைகொடுக்க ஆரம்பிக்கின்றனர். புது முகங்கள் அறிமுகமாகின்றன! 1983 - 1995 வரையேயான காலப்பகுதியில் இந்தியா அணி மீண்டும் ஒரு தரமான அணியை ஒருவாக்க வேண்டிய நிலையில் இருந்தது. அப்போது தான் இந்திய அணி மிக மோசமான அடைவுகளை பதிவு செய்கிறது!
190 ODI களில் வெறுமனே 94 ODI மாத்திரமே வெற்றி பெறுகிறது! 90 போட்டிகளில் தோல்வி! அதேபோல் 64  Test இல் 18 போட்டிகளில் வெற்றி பெற்று 14 போட்டிகளில் தோல்வியுறுகிறது 31 போட்டிகளில் ட்ரா செய்கிறது!
இது 1986-1995 வரையேயான காலப்பகுதியில்!

இவ்வாறான ஓர் சூழ்நிலையில் தான் சச்சின் டெண்டுல்கர் எனும் 16 வயது சிறுவன் இந்திய கிரிகெட் இல் தடம் பதிக்கிறான்! உள்ளூர் போட்டிகளில் சதங்களை சர்வசாதரணாமாக விளாசியதன் விளைவாக 16 வயதிலேயே அணியில் இணைத்துக்கொள்ளப்படுகிறான்! அசாருதீன் போன்ற ஓரிரு வீரர்கள் மாத்திரமே இருக்க அணியில் இணைந்த சச்சின் இற்கு அணியை தாங்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. ODI Test என இரண்டிலும் தான் பாரிய பங்கை வழங்க வேண்டிய தேவையேற்படுகிறது. 1983 இல் இருந்த பலர் குட்பாய் சொல்லிவிட்டு செல்ல சச்சின் தலையில் பாரிய சுமை இந்திய அணியினால் அவர்களை அறியாமலே சுமத்தப்படுகிறது! 1992 உலக கோப்பையில் சச்சின் உம் அசாருதீனுமே மாறி மாறி போட்டிகளில் பங்களிப்பு செய்கிறார்கள்! சச்சின் 1989 இல் தான் கிரகெட் அரங்கில் நுழைந்தார்! 1996 உலக கோப்பையில் சச்சின் தான் இந்தியா விற்கு போட்டிகளை வென்றுகொடுக்கிறார்! அணியின் ஓட்டங்களில் 40-55% ஆன ரன்களை சச்சினே அடித்தார்! செமி பைனலில் சச்சின் 65 உடன் ஆட்டிமிழக்க இந்திய அணி சரிகிறது. இவ்வாறு சச்சின் இன் ஆரம்ப காலம் பாரிய சுமைகளை சுமந்தவையாகவே ஆரம்பிக்கின்றது! அணியை சுமக்க வேண்டிய தேவை சச்சின் இற்கு!

ஊழல் , மெச்பிக்சிங் என சினியர் வீரர்கள் அகப்பட்டு ஓர் கடின பாதையை கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது இந்தியா! இளம் வீரர்களை கொண்டு அணியை ஒப்பேற்ற வேண்டிய நிலை! கங்குலியின் தலமைத்துவம்! இப்போதிருக்கும் இந்திய அணிக்கு அஸ்திவாரம் இட்டது கங்குலி தான்! இளம் வீரர்களை கொண்டு இந்தியா அதுவரை செய்திராத பல சாதனைகளை செய்து இந்திய அணியை தலைப்பட செய்கிறார். அவ்வாறு மெல்ல மெல்ல கட்டியெழுப்பிய அணியை தான் தோணி பொருப்பேற்றார்! கங்குலி அஸ்திவாரம் இட்டு மெல்ல கட்டியெழுப்பிய இந்திய அணியை தோணி அடுக்குமாடிகளாக்கி விஸ்வரூப வளர்ச்சிக்கு கொண்டுசென்றார்! இவ்வாறான ஓர் திடமான தரமான பல சிறந்த பெட்ஸ்மேன்கள் ஆடி கொண்டிருக்கும் காலப்பகுதியில் தான் கோலி இன் என்றி இடம்பெறுகிறது!  2008 இல் அணியினுள் உள்வாங்கப்பட்ட கோலி ODI இல் மாத்திரம் கவனம் செலுத்தினார்! சேவாக் , சச்சின் , கம்பீர் போன்ற முதன்மை வீரர்கள் injured அல்லது ஓய்வு கொடுக்கப்பட்டாலே கோலியிற்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டது ஆரம்பத்தில்! ஒரு reserve player ஆகவே கோலி ஆரம்ப காலத்தில் பார்க்கப்பட்டார்!

சச்சின் போன்று அணியை தாங்க வேண்டிய நிலை கோலிக்கு இருக்கவில்லை! தான் பெட் செய்து ரன் ஸ்கோர் செய்தால் தான் இந்திய அணி வெற்றிபெறும் என்ற நிலை கோலிக்கு இருக்கவில்லை சச்சின் இற்கு இருந்தது ! இதனாலேயே சச்சின் இன் ஆரம்பகால ஓட்ட எண்ணிக்கையும் சரி பெர்பமென்ஸ் உம் சரி சற்று குறைவாகவே இருந்தது! ஆனால் கோலி அவ்வாறில்லை! கோலி இற்கு ஓரு freedom இருந்தது ! சச்சின் சேவாக் கம்பிர் யுவ்ராஜ் டோனி என பல பெயர்பெற்ற பெட்ஸ்மேன் கள் அணியில் இருந்தனர்! கோலி தன்னை சிறந்த பெட்ஸ்மேன் என நிரூபிக்க வேண்டிய தேவை மாத்திரமே இருந்தது! 2008-2010 வரை கோலி சச்சின் , கம்பீர் இற்கு பிரதியீடாக போடப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்தார்! 2010  ஒரு போட்டியில் man of the match பெற்ற பின் "அணியில் தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்ற pressure இருந்ததாக " கூறியிருந்தார்! 2010 இல் தான் நிரந்தரமான இடம் கிடைக்கிறது கோலி இற்கு! அதுவரை கோலி டெஸ்ட் ஆடவில்லை ஓடிஐ தான் விளையாடி கொண்டிருந்தார். 2011 இல் தான் டெஸ்ட் இல் நுழைந்தார்! ஆனால் சச்சின் அணியினுள் நுழைந்த காலம் முதல் அவரிற்கு பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டிருந்தது! டெஸ்ட் ஓடிஐ என இரண்டிலும் பிரகாசிக்க வேண்டிய கட்டாய நிலை இருந்தது! ஆனால் கோலி ஒருவகையான freedom  ஐ அனுபவித்தார்! அவரிற்காக விளையாட வேண்டிய நிலை மாத்திரமே ஆரம்பத்தில் இருந்தது! அவர் பிரகாசிக்காவிட்டாலும் அணியில் பல பெட்ஸ்மேன் இருந்தனர்! தன்னை அணியில் நிலைநிறுத்தவே கோலி ஆரம்பத்தில் போராடினார்!

சச்சின் கோலியின் ஆரம்பகாலமே இவ்வாறு மாறுபட்ட இரு பக்கங்களாக காணப்படுகின்றன!

அடுத்து bowlers ! சச்சின் , கோலி எதிர்கொண்ட பந்துவீச்சாளர்கள் இற்கு இடையில் பாரிய வேறுபாடுகள் உண்டு ! இப்போதிருக்கும் பந்துவீச்சாளர்கள் திறமையற்றவர்கள்  என்பது என்வாதம் அல்ல! மாறாக முன்னர் இருந்த பந்துவீச்சாளர்கள் ஒப்பீட்டளவில் இப்போதிருப்பவர்களை பன்மடங்கு சிறந்தவர்கள்! ஒரு பந்துவீச்சாளர் சிறந்தவரா என்பது away performances , ஆசிய பந்துவீச்சாளர் ஆயின் outside Asia அல்லது ஆசியவிற்கு வெளியே உள்ள பந்துவீச்சாளர் ஆயின் performance in Asia என்பவைகளை வைத்தே தீர்மானிக்க முடியும்! அவ்வாறு நீங்கள் இப்போதிருக்கும் பந்துவீச்சாளர்களையும் முன்னர் இருந்த பந்துவீச்சாளர்களையும்  குறைந்தது முதல் 50 போட்டிகளை மாத்திரம் "Home/away performance" , "Outside Asia " , "Inside Asia performance" ஆகியவற்றை ஒப்பீடு செய்து பாருங்கள்! யார் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் எனபது புரியும்! (அவ்வாறு ஒப்பிடுவதும் சிறந்த ஒப்பீடாக இருக்காது எனினும் ஒரு தெளிவிற்காக)
இதனடிப்படையில் பார்த்தால் சச்சின் வகார் , அக்தார் , முரளி , வோர்ன் , மெக்ராத் , பொலோக், வாஸ் , வசீம் அக்ரம் போன்ற வீரர்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருந்தது! ஆனால் கோலி அவ்வாறான பந்துவீச்சாளர்கள எதிர்கொண்டாரா என்பது தெரியவில்லை ஆனால் கோலி அவர் காலத்தில் காணப்படும் சிறந்த பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை!

கிரிகெட் பிச்கள் பெரிதும் ஒரு பெட்ஸ்மேன் இல் பாதிப்பை ஏற்படுத்துவதாக காணப்படுகிறது! 2007 T20i அறிமுகப்படுத்தலின் பின் பிச்களை அமைக்கும் முறை பெரிதும் மாற்றங்களை கண்டிருக்கிறது! T20 இற்கு முன் பிச்கள் பெரும்பாலும் நியூற்றலாகவே அமைக்கப்பட்டன! பேட்டிங் போலிங் இரண்டையும் கையாளும் அளவு பிச்கள் காணப்பட்டன! ஆனால் ஒரு entertainment medium ஆக கிரகெட் மாற்றம் பெற்று T20 வந்ததன் பிற்பாடு பிச்கள் பேட்டிங் பிச்களாகவே அமைக்கப்படுகின்றன! Football Tennis போன்று கிரிகெட் உம் மக்களை கவர வேண்டும் என்பதற்காகவே T20 அறிமுகப்படுத்தப்பட்டது!  பேட்டிங் பிச்களை   அமைத்து அதிரடியான ஓட்டக்குவிப்புகள் இடம்பெற்றாலே மக்கள் அதை விரும்புவர் டெஸ்ட் ஓடிஐ போன்று இருந்தால் மக்களை கவர முடியாது என்ற நிலை அறிந்து பிச்கள் இப்போது பேட்டிங் பிச்களாக மாற்றப்படுகின்றன! ஒரு Sports ஆக இருந்த கிரிகெட் இப்போது பணம் சம்பாதிக்கும்  Industry ஆகிவிட்டது! இதனால் பெட்ஸ்மேன் களிற்கு அதிக சாதகம் காணப்படுகிறது! அதுமாத்திரமன்றி பெட்ஸ்மேன் கள் அதிக ஓட்டங்களை குவித்தால அணியில் நிலைத்திருக்க முடியும் என்ற நிலையும் தோற்றம்பெற்றுவிட்டது! இதனால் தோற்றம் பெற்ற  entertainment cricket ஆல் கிரகெட் இன் உண்மை வடிவம் சிதைந்து போய்விட்டது! இவ்வாறான T20 இன் தாக்கம் கிரிகெட்டில் பெரிதும் காணப்பட்ட காலப்பகுதியில் தான் கோலி கிரகெட் அரங்கு நுழைகிறார் . முதல் இரண்டு வருடங்கள் ஓடிஐ , டிடுவன்டி பெட்ஸ்மேன் ஆக மாத்திரம் செயற்படுகிறார்! ஆனால் சச்சின் இன் வருகையின் போது அவ்வாறான ஓர் நிலை இருக்கவில்லை! அது கோலியின் வருகையின் போதிருந்த நிலைக்கு நேர்எதிரானது! டெஸ்ட் ஓடிஐ என்பவை தான் கிரிகெட் ! ஓடிஐ இல் 200-230 வரை அடித்தாலே போதும் என்ற நிலை! அடித்தாடும் நிலை கிடையாது! தனி நபர் செஞ்சரி என்பது அப்போது கடினமான இலக்கு! டெஸ்ட் போட்டிகள் 5 நாற்களும் முழுமையாக இடம்பெற்றன! அது தான் கிரிகெட் இன் உண்மை வடிவமும் கூட! இக்காலத்தில் தான் சச்சின் தன்னை வளர்த்துகொண்டார்! கோலி முற்றிலும் அடித்தாடும் யுகத்தில் வளர்கிறார்! சச்சின் தடுத்தாடும் யுகத்தில் வளர்ந்தார்!

சரி மேல கூறிய காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் சில நியமங்களை வைத்து சச்சின் கோலியை ஒப்பிட்டால்..

கோலி ஓடிஐ இல் டெபியூ ஆன ஆண்டு 2008 அப்போது டிடுவன்டி உம் அறிமுகமாகிவிட்டது! டிடுவன்டி தாக்கம் சச்சின் கோலி ஆகிய இரண்டு பேரிலும் இருந்திருக்கும்! ஆனாலும் சச்சின் கோலி இன் டெபியூ இற்கு முன் (2008 இற்கு முன்)  397 இன்னிங்ஸ் களில் விளையாடிய  அனுபவம் உடையவர் ஆனால் கோலி கு இன்டர்நேசனல் கிரிகெட் புதுசு! இப்போது கூட ஒப்பிட முடியாது! கோலி முதல்போட்டி விளையாடும் போது சச்சின் 397 இன்னிங்ஸ் அனுபவமுடையவர்! கோலி முதல் போட்டி விளையாடும் போது சச்சின் விளையாட்டில் ஓய்வுபெறும் நிலை! 2008-2012 வரையேயான இருவரிற்கும் பொதுவாக இருக்கும் காலப்பகுதியின் நிலையை அலசினால்;

2008-2012 : (ODI only)

•Overall performance:

சச்சின்-                       கோலி-
Innings : 55                 Innings: 88
Runs : 2464.                Runs: 3886
Average: 38.87           Average: 49.87
50s : 9                          50s: 21
100s : 8                        100s : 13

•Away from Home

சச்சின் -                      கோலி-
Innings: 32.                 Innings: 50
Runs: 1226.                 Runs: 2043
Average: 42.99.          Average: 47.80

•Out of Asia

சச்சின்-                       கோலி-
Innings: 23.                 Innings: 29
Runs: 825.                   Runs: 1222
Average: 42.5.            Average: 52.85

ஆக இந்தக்காலப்பகுதியில் சிலபல காரணிகளை கருத்திற்கொள்ளாமல் வெறுமனே புள்ளிவிவரங்களை வைத்து பார்த்தால் கோலி சச்சினை விட சிறந்தவராக காணப்படுகிறார்! ஆனால் சச்சின் இன் முழு கெரியரையும் கோலியின் கெரியருடன் ஒப்பிட முடியாது! இந்த பதிவே அதை தெளிவுபடுத்த தான்!

இரண்டு பெட்ஸ்மேன் களை ஒப்பிடும் போது மேல் சொன்ன காரணங்கள் இருவரிற்கும் இடையில் ஒத்துப்போனாலும் அடுத்து கவனிக்க வேண்டிய விடயம் பெட்டிங் position! Opening batsmen ஆக விளாடுவதிற்கும் , One down batsmen ( 3rd position) ஆக விளாடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு! Opening batsmen புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்! புது பந்து சீம் ஆக கூடிய பண்பு கொண்டது ஆனால் 3rd position அவ்வாறில்லை! 5 அல்லது 10 ஓவர்கள் பழமையான பந்தையே விளையாடுவர்! சச்சின் 452 innings இல் 340 innings opener (15000+ runs ; 48+ average) ஆகவே விளையாடியிருக்கின்றார்!  3rd positionஇல் 10  innings களும் 4th positionஇல் 61 innings களும் . ஆனால் கோலி opener ஆக 6 inningsகளிலும் 3rd position இல் 153 innings களிலும் ( 7983 runs ; 69+ average) ஆடியிருக்கிறார்!
ஆக சச்சின் ஏறத்தாழ 80 % ஓட்டங்களை ஓபனராக பெற்றிருக்கிறார்! அவரது பல சாதனைகளும் இந்த ஓபனர் காலப்பகுதியில் தான் பெற்றார்! ஆனால் கோலி 75% ஓட்டங்களை 3rd position இல் ஆடி பெற்றிருக்கிறார் கோலியின் அத்தனை ரெகாட்களும் இந்த காலத்தில் தான் பெற்றிருக்கிறார்! ஆக இவ்வாறு வேறு வேறு வித்தியாசமான பேட்டிங் பாசிசன்களில் ஆடிய இரு வீரர்களை எந்த முறையில் ஒப்பீடு செய்வீர்கள்?
2008-2012 பகுதியிலும் இரண்டு வீரருக்கு வேறு வேறு பேட்டிங் பொசிசனில் தான் ஆடியிருப்பர் . ஆக அந்த காலப்பகுதியில் கூட சச்சின் கோலியை ஒப்பிட முடியாது!



Highest average in wins ஐ பார்த்தால்  11157 run களை 56.63 என்ற average இல் 33 century  59 half century என்ற கணக்கில் வெற்றியீட்டிய ODI போட்டிகளில் சச்சின் பெற்றிருக்கிறார்!
ஆனால் கோலி     7000 ஓட்டங்களை  70+ எனும் average 28+ century அடங்களாக பெற்றிருக்கிறார்!
இதனடிப்படையில் கோலி சச்சின் ஐ விட முன்னிலையில் இருப்பது போல் இருந்தாலும் சச்சின் 1989 - 2000 வரையேயான காலப்பகுதியில் பல போட்டிகளை ( 463 போட்டிகளில் 263 போட்டிகள் 1989-2000 காலப்பகுதியில் ஆடியிருக்கிறார்) வென்று கொடுத்திருக்கிறார் ஆனால் கோலி போட்டிகளை வென்றுகொடுத்த போது கோலியில் மாத்தரிம் அணி தங்கியிருக்கவில்லை சச்சினை போல்!
அதேபோல் மேலே சொன்ன காரணிகள் அனைத்தும் இதிலும் தாக்கம் செலுத்தும்!

ஆக இந்த கட்டுரை இன் முடிவாக ;
இரு வீரர்களை ஒப்பிடுவதாயின் அவ்விரு வீர்ர்களிற்கும் இடையில் ஒற்றுமைகளை முதலில் பட்டியல் இட வேண்டும்! அவ் ஒற்றுமைகளை கொண்டே அவ்விரு வீரர்களும் ஒப்பிட பட வேண்டும்! இரு வேறு காலகட்டங்களில் ஆடிய இரு வீரர்களிடம் ஒற்றுமையான காரணிகள் மிக மிக குறைவாகவே இருக்கும்! ஆக அவர்களை ஒப்பிடுவது என்பது யானையை பூனையுடன் ஒப்பிடுவது போன்றானது! ஆனால் ஒரே காலகட்டத்தில் ஆடும் இரு வீரர்களை தாராளமாக ஒப்பிடலாம் காரணம் அவர்கள் இருவரிற்கும் இடையில் 50% அதிகமான ஒற்றுமைகள் காணப்படும்!  கோலியை தாராளமாக ரூட் உடன் ஒப்பிடலாம்! ஆனால் சச்சின் உடன் ஒப்பிட முடியாது!

சச்சின் கோலி அவரவர் காலத்தில் இருவரும் ஜாம்பவான்களே! இன்னும் 100 வருடங்களின் இருவரின் பெயரும் பேசப்படும் என்பதில் ஐயமில்லை! சச்சின் இன் ரெகாட்ஸ் , கோலி இன் ரெகாட்ஸ் ஆகியவற்றை கொண்டாடலாம் ஆனால் அவற்றை ஒப்பிட முடியாது! 250+ இன்னிங்ஸ் இல் சச்சின் 10000 ஓட்டங்கள் கடந்தார் அதை 205 இன்னிங்ஸ் இல் கோலி கடக்க்கிறார்! இது வெறுமனே ரெகாட்ஸ் ஆக பாருங்கள் இரு வீரர்களையும் அனுமானிக்கும் காரணியாக பார்க்காதீர்கள்! காரணம் 1990-2000 வரையேயான காலத்தில் பெறப்பட்ட 1000 ஓட்டங்களிற்கும் 2000-2010 வரை பெறப்பட்ட 1000 ஓட்டங்களிற்கு பாரிய வேறுபாடு உண்டு!

50-75% வரையேயான ஒற்றுமைகளை கொண்ட இரு வீரர்கள் இருந்தால் ஒப்பிடுங்கள்! தப்பில்லை! இரு வேறு காலங்களில் ஆடிய இருவரிடையில் இவ்வாறான கணக்கில் ஒற்றுமை இருக்காது புரிந்து கொள்ளுங்கள்! கோலி சச்சின் இருவரும் கொண்டாட பட வேண்டியவர்கள், கம்பேர் செய்யப்பட வேண்டியவர்கள் அல்ல! இருவரும் இரு வேறு வேறான துருவங்கள்!

Sajeeth Raheem
சச்சின் ? கோலி? யார் சிறந்தவர்? சச்சின் ? கோலி? யார் சிறந்தவர்? Reviewed by Tamil One on November 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.